கும்பகோணம், ஏப். 19 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, நாச்சியார் கோயில் திருநறையூரில் அமைந்துள்ளது அருள்மிகு பருவதவர்த்தினி சமேத திருராமநாதசுவாமி திருக்கோயிலாகும்.
மேலும் இச்சிறப்புமிக்க திருக்கோயிலில் சனி பகவான் மந்தாதேவி, ஜேஷ்டா தேவி ஆகிய இரு மனைவியுடனனும் மேலும் மாந்தி மற்றும் குளிகன் என்ற இரு புதல்வர்களுடன் குடும்ப சமேதராய் இங்கமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
மேலும் இவ்வாலயம் தசரத மன்னன் வழிபட்ட தலம் என்ற சிறப்பும் இதற்கு இருப்பதாக அத்திருக்கோயில் தலவரலாறு கூறுகிறது. மேலும் இத்திருக்கோயிலில் பல்வேறு புராண சிறப்புகள் பற்றி ஆலயத்தில் தினசரி குளிகை காலத்தில் சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் கூட்டு வழிபாடு ஆராதனைகள் என நடைபெறுகிறது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமையான நேற்று மதியம் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இரு குடும்பத்தினர் சனி பகவானுக்கு அபிஷேகங்கள் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர். சனிபகவானுக்கு சிறப்பு விசேஷ பூஜைகளை ஆலய அர்ச்சகர் ஞானசேகர சிவாச்சாரியார் செய்தார். பின்னர் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் எள் சாதம் ஆகிய பிரசாதங்கள் வழங்கினர். சிறப்பு தரிசன ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அதிகாரி பிரபாகரன் மற்றும் ஆலய பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

























