காஞ்சிபுரம், ஏப். 20 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …

ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் கோவிலில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பிறந்தநாள் முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைப்பெற்றது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவிலில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பிறந்தநாள் முன்னிட்டு மாநில பொது செயலாளர் முனைவர் லையன் கே முத்து தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். இதில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு உகந்த முந்திரி திராட்சை இனிப்பு வகைகள் ரோஜாப்பூ துளசி மாலைகள் கொண்டு அர்ச்சனை செய்து கோவிலில் திரண்டு இருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் அணி புதிய நிர்வாகி அறிமுகம் செய்து சால்வை அணிவித்து இந்து மக்கள் கட்சியில் இணைத்துக் கொண்டனர். மேலும் அரக்கோணம் பகுதியில் நகர நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்பட்டு சால்வை அணிவித்து அறிமுகம் செய்து வைத்தனர். மேலும் இவர்கள் இந்து மக்கள் கட்சியின் வளர்ச்சிக்காகவும் மக்கள் நலப் பணிகளுக்காகவும் தங்களை அர்ப்பணித்து புதிய உறுப்பினர்களை சேர்க்க முனைப்புடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here