தொண்டைவளநாடு என ஔவை பிராட்டியாரால் பாடி புகழப்பெற்ற “செங்கல்பட்டு” மாவட்டத்தில், மண்ணில் சிறந்ததோர் மதுராந்தகம் என போற்றி புகழப்படும் ஏரிகாத்தராமன் புகழ் “மதுராந்தகம்” தாலுக்காவில், கிராம எண்: -6- மாமண்டூர் ஊராட்சியில், பாலாற்றங் கரையில் அமைந்துள்ள வந்தாரை வாழவைக்கும் ஸ்தல சிறப்புமிக்க “வடபாதி கிராமம்” இந்த ஊரை மாமண்டூர்-வடபாதி என அழைப்பர் இந்த ஊரில்தான் வடபாதிஆதீனம் ஸ்ரீபூமாத்தம்மன் சித்தர்பீடம் ஸ்ரீமடம் அமைந்துள்ளது
செங்கல்பட்டு, அக். 25 –
இத்திருவிடத்தில் அமைந்துள்ள மூலவர் அருள்மிகு பூமாத்தம்மன் என்னும் திருநாமம் ஆகும். புராதன மிகவும் தொன்மையான இத்திருத்தலம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முட்பட்டது என தொல்லியல்துறை கூற்று, இத் திருத்தலத்தில் 1880 ல் வாழ்ந்த மஹான் கந்தசாமி சித்தர் அவர்கள் “பூமாதுவிருத்தம்” “ஆகாஷகன்னியம்மன்விருத்தம்” “காமாட்க்ஷிஅம்மன் விருத்தம்”,1880-ல் ஓலைச்சுவடியில் இயற்றியருளியவை இன்றும் ஆலயத்தில்உள்ளன.அதை எழுத பயன்படுத்திய எழுத்தாணியும் பாதுகாக்கபட்டு வருகின்றன,
வடபாதி தேவி பூமாத்தம்மனை தினம்தோறும் நல்லிரவு 12-மணி க்கு சப்தகன்னியர்கள் வந்துவழிபடுவதாகவும் வழிப்பட்டபிறகு ஸ்ரீ பூமாத்தம்மன் வெள்ளை புடவையில் வெள்ளை குதிரையில் அந்த கிராமத்தை வலம் வருவதாகவும் வரலாறு இந்த தலத்தில்தான்1880-ல் வாழ்ந்த மஹான் ஸ்ரீஸ்ரீகந்தசாமி சித்தர் என்பவரால் இந்ததலத்தில் கன்னியம்மன் பாடல் பாடியருளப் பெற்றுள்ளது (இந்தபாடலை பாடுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. இது கண் கூடான உண்மை என பக்தர்களால் நம்ப படுகிறது ) இங்கு இருக்கும் கன்னியம்மனின் திருப்பெயர்கள்:- அம்பிகா,சுந்தரி,பத்மினி, ஹஸ்தமாலினி, காமினிசக்தி, வாமினிசக்தி, விருஷபசக்தி.
கன்னியம்மனின் மற்றொறு பெயர் :-பட்டாரிகா, தேவகன்யா, பத்மகன்யா, சிந்துகன்யா, சுகசகன்யா, வனகன்யா, சுமதிகன்யா ஆகியன ஏழு கன்னி தெய்வங்கள். இவைகள் தான் பராசக்தி, துர்கா, காளி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களுக்குக் காவல் மற்றும் பரிவார தெய்வங்கள். ஆகும்.
மேலும் இத்திருதலத்திற்கு காஞ்சி மஹாபெரியவர் நேரில் விஜயம் செய்து பூமாத்தம்மனை பூஜித்து சக்தி வாய்ந்த யந்திரத்தையும் ஸ்தாபனம் செய்து கும்பாபிஷேகம் செய்து தந்துள்ளார்கள். எனவும் கூறப்படுகிறது.
அன்று முதல் இந்த அம்மனின் சாந்நித்யம் அபரிமிதமாகக் காணப்படுவது கண்கூடாண உண்மை எனவும் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாகும். “வாழ்வுமாணவள்துர்க்கா” “மங்களரூபிணி மதியணிசூலிணி” ஆகிய ராகுகால நேரத்தில் பாடக்கூடிய துர்க்கையின் பாடல்கள் எழுதியளிய படப்பை உபாசனகுலபதி ஶ்ரீலஶ்ரீ பகவான் துர்க்கைச்சித்தர் அவர்கள் வந்து பூஜித்த திருத்தலம் எனவும் கூறப்படுகிறது.
மேலும், மயிலை மாமுனிவர் ஞானகிரிசித்தர் மூகாம்பிகை ஶ்ரீலஶ்ரீ இராதாகிருஷ்ண அடிகளார் பலமுறை கும்பாபிஷேகங்கள் செய்வித்து வணங்கி தொழுத திருத்தலமாகும். இப்படி பல்வேறு மஹான்கள் வழிப்பட்ட வடபாதி ஶ்ரீபூமாத்தம்மன் கைவிரித்தோர்க்கெல்லாம் வளம் கூட்டும் வர பிராதியான அம்மனாக திகழ்கின்றார்.
இத் திருக்கோயிலில் அன்னை பூமாத்தம்மன் அருள்வடிவம் வியக்கதக்க வடிவமைப்பில் அமைந்துள்ளது சிரசில் ஒளிவட்டம் என்னும் அக்கினி ஜுலையுடன், அம்மனின் வலதுகண் கீழ்நோக்கியும் , இடதுகண் மேல்நோக்கியும் காணப்படும். குழை என்று சொல்லக்கூடிய குழைந்தையை குண்டலமாக வலப்புற காதில் அணிந்தும், இடப்புற காதில் மகர குண்டலங்கல் அணிந்தும் காணப்படுகிறாள். உடலில் மண்டை ஓட்டை பூணூலாக அணிந்து, கோரை பற்களுடன் அழகிய சிரித்த திருமுகத்தோடு அழகிய “நெற்றிகண்னோடு” காட்சி தருகிறாள், வலதுகால் பூமியை நோக்கியும், இடதுகால் மடிக்கப்பட்ட நிலையிலும் தாமரை கமலபீடத்தில் அமர்ந்து அருளாட்சி செய்து வருகிறாள்.
வரப் பிரசாதியான பூமாத்தம்மனின் புராதன திருநாமம் பூமாது, தில்லைபூமாது, இப்பெயரே நாளடைவில் பூமாத்தம்மனாக மருவி அழைக்கப்பட்து. அம்பாளின் ஸ்லவிருட்சம் :-கல்லாலமரம்’ தீர்த்தம்- சங்குபிர்மதீர்த்தமாகும்.
மேலும் இவ்வாலயத்தில் கூடுதல் சிறப்பாக :-
பூமாத்தம்மனின் நேர் எதிரே கம்பீரமாக நின்று ஆலயத்தையும் வரும் பக்தர்களையும் பாதுகாத்து வரும் ஶ்ரீமுத்து கருப்பண்ணசாமி, ஶ்ரீஞானசக்தி கணபதி, ஶ்ரீவிஜயகணபதி, ஶ்ரீபாலகணபதி, ஶ்ரீபாலமுருகன் ஶ்ரீவள்ளி தேவசேனா உடனுரை ஶ்ரீசெல்வ முத்துக்குமாரஸ்வாமி, ஶ்ரீமத் பாம்பன்சாமி, ஶ்ரீஅருணகிரிநாதர், ஶ்ரீகுருமுனி அகத்தியபெருமான், அஷ்டநாகதெய்வங்கள், ஶ்ரீ ஐயப்பன் ஶ்ரீசீரடி சாய்பாபா, மற்றும் அருள்மிகு அபிராமி சுந்தரி உடனுரை ஶ்ரீஸர்பலிங்கேஸ்வரர், அதர்வண பத்ரகாளீ ஶ்ரீஉக்ரப்பிரத்தியங்கிராதேவீ , மந்திரவராஹீ, கைவல்யசித்தி அருளும் ஶ்ரீதியானேஸ்வரகாளீ ஶ்ரீலஷ்மிநரஸிம்மர், ஶ்ரீலஷ்மி ஹயக்ரீவர், ஶ்ரீ பெருராமபக்த ஆஞ்சநேயர். ஆகிய தெய்வங்கள் பரிவாரங்களாக அருள் பாலிக்கின்றன.
புகழ் பெற்ற இத்திருதலத்தின் முக்கிய சிறப்பு:- வடபாதிஆதீனம் ஶ்ரீபூமாத்தம்மன் சித்தர்பீடம் ஶ்ரீமடம் உபாசன குலபதி திலகம், குருமஹா சன்னிதானம் வடபாதிசித்தர் பாலயோகி அடிகளார் ஸ்வாமிகளின் அருளாட்சியே.
ஶ்ரீதுர்க்கைச் சித்தரின் ஆத்ம சீடர் வடபாதி சித்தரின் வரலாறு;
தெய்வங்கள் எல்லாம் மானிடர்கள் துயர் துடைக்க தானே முன்வந்து பேச தன் நிலையில் வாழும் பிர்ம்மத்தை உணர்ந்த சத்தியமான நல்லோர்களான ஜீவன்களை ஞானிகளாக்கியும் தன் உபாசகர்களாக்கியும், சித்தர்களாக்கியும், அவரகள் மூலம் அருளாட்சி செய்து அருள்வாக்காக தன் பக்தர்களின் துயர் துடைக்கின்றன.
அவ் வகையில் ஶ்ரீ பூமாத்தம்மனின் அருட் குழந்தையாக அன்னையின் அதே கருணை வடிவமாக, நடமாடும்-பேசும்தெய்வமாக பிணி நீக்கிட வந்த வைத்தியராக நாடி வந்தோர்க்கெல்லாம், நல் வாக்கருளும் மஹாகுருவாக, கைவிடபட்ட சேய்களுக்கெல்லாம் தன் கருணையாள் அனைத்தருளும் தாயாக, வடபாதிசித்தர் பாலயோகி அடிகளார் அவர்கள் விளங்குகிறார்கள்.
வடபாதி சித்தர் அவர்களின் பெறோர்கள் வைத்த திருநாமம் ஶ்ரீசக்தி முத்துக்குமாரஸ்வாமி என்பதாகும், சித்தரின் தாய் தந்தையர்கள் திருநாமம் தந்தை நல்.வைத்தியநாதன் தாயார் பத்மாவதி அம்மையாராகும். சித்தரின் தந்தையார் வைத்தியநாதன் அவர்கள் ஆந்திர மாநிலம் மும்முடிவரம் பகவான் பாலயோகியின் தீவிர பக்தர் ஆவார்கள். ஒவ்வொறு வருடமும் மஹா சிவராத்திரிக்கு மாமண்டூர்-ஆத்தங்கரை ஶ்ரீராஜராஜேஸ்வரி சித்தர் பீடயோகி சாது நாராயணசாமிபிள்ளை சித்தருடன் ஒரு சித்தர் அடியார் குழுவாக அதாவது வடபாதி குமாரசாமி முதலியார், சிவசாமி முதலியார், செய்யூர் சித்தர், போன்ற அடியார்களோடு மும்முடிவரம் சென்று பகவான் பாலயோகியை தரிசிப்பது வழக்கம் அப்படி ஒருமுறை செல்லும் பொழுது 1969-ல் சித்தரின் தந்தையார் தன் 3-வயது குழந்தை ஶ்ரீசக்திமுத்துக்குமாரஸ்வாமியை அழைத்து சென்றார்கள் அப்பொழுது பகவான் பாலயோகி சித்தர்ஸ்வாமிகள் அந்த குழந்தையை அழைத்து ஆரதழுவி வலது காதில் ரகசியம் ஏதோ சொல்லி மஹானூபாகு என்று கூறியவாறு குழந்தையை தருகிறார். அந்த குழந்தைதான் தற்பொழுது ஆன்மீக குருவாக வளம் வந்து கொண்டிருக்கும் வடபாதிசித்தர் பாலயோகிஅடிகளார் ஸ்வாமிகள் ஆவார்.
மஹான் பாலயோகியாரின் சூட்சுமதீட்க்ஷ பெற்ற ஸ்வாமிகள் ஆன்மீக நூல்களை கற்றறிந்து மிகவும் லையித்து இருக்கிறார், பிறகு கல்விபயின்று வேளைக்கு போகிறார், சித்தரின் உடன் பிறந்த சகோதரர்கள் வை. சண்முகம் வை.சேகர், ஒருசகோதரி வை. ஜோதி ஸ்வாமிகள்தான் கடைசி பிள்ளை பிறகு தந்தை இறந்த பிறகு அவரது சகோதரர்கள் சேர்ந்து கௌரி என்னும் மங்கையை திருமணம் செய்து வைக்கிறார்கள். திருமணம் ஆன நாள் முதல் இருவரும் சுத்த பிர்மசாரியமான வாழ்க்கையை மேற்கொண்டு உலக மக்களுக்காக தனனை துறந்து பாலயோகி ஆசீர்வாதத்தால் பூமாத்தம்மனால் ஈர்த்து ஆட் கொள்ளபட்டு மாமண்டூர்-வடபாதி ஶ்ரீபூமத்தம்மன் ஆலயத்தில் வடபாதி ஆதீனம் ஶ்ரீபூமாத்தம்மன் சித்தர்பீடம் ஶ்ரீமடம் அமைத்து காஞ்சி தொண்டைமண்டல 231-பட்டம் சீர்வலர் சீர் ஞானபிரகாச பரமாச்சாரிய குருமஹாசன்னிதானம் அவர்களால் வடபாதிசித்தருக்கு குருமஹாசன்னிதானம் வடபாதிஆதீனகுருமஹானாக ஆச்சாரிய அபிஷேகம் செய்விக்கபட்டு ஆதீனதீட்க்ஷை அருளப்பட்டு மடாதிபதியாக பட்டமளிக்கப்பட்டது.
அன்று முதல் இந்நாள் வரை வியாபார நோக்கோடு அல்லாமல் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி லோகச்ஷேமம் பரமாணந்தம் என்ற வகையில் மக்களுக்காக வாழ்ந்து பீடத்தில் உண்மையாண அருளாட்சி அவருளால் செய்து வருகிறார் குருமஹாசன்னிதானம் வடபாதிசித்தர் அவர்கள்.
ஸ்ரீபூமத்தம்மன் சித்தர் பீடம் பற்றிய மேலும் தெரிந்துக் கொள்ள
சித்தர்பீடத்தின் 📞 கைபேசி எண்; 9840174690 / 9444880630