புதுச்சேரி:

புதுவை கவர்னர் மாளிகை முன்பு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்து வரும் தர்ணா போராட்டத்தால் புதுவையில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது.

இதனையொட்டி, சென்னை ஆவடி மற்றும் அரக்கோணம் பகுதியில் இருந்து 4 கம்பெனி துணை ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

இதில், ஒரு கம்பெனி துணை ராணுவத்தினர் இன்று (வியாழக்கிழமை) காலை 6.40 மணியளவில் டிஜிபி அலுவலகம் வந்தனர். இதில், 128 துணை ராணுவ படை வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் கவர்னர் மாளிகை, சட்டமன்றம் மற்றும் கடற்கரை சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மீதமுள்ள 3 கம்பெனி துணை ராணுவத்தினர் கோரிமேடு போலீஸ் மைதானம் வந்துள்ளனர். அவர்களும் நகர பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here