திருவாரூர், ஆக. 31 –
திருவாரூர் மாவட்ட சுகாதாரத் துறை மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் திருவாரூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
மேலும் திருவாரூர் ரயில் நிலையத்தில் தொடங்கிய மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த உறுதி மொழி எடுத்துக் கொண்டு அப்போட்டியினை கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.
தொடர்ந்து பழைய பேருந்து நிலையம், பனகல் சாலை, கீழவீதி வடக்கு வீதி, மற்றும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்த மாரத்தான் வீரர்கள் போட்டியின் நிறைவு எல்லையா நகராட்சி அலுவலகம் வந்து நிறைவு செய்தனர். இம் மாரத்தான் போட்டியில், மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.
மாணவ மற்றும் மாணவியர்களுக்கு தனித்தனியே நடத்தப்பட்ட அப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகளை வழங்கிடவுள்ளார்.





















