செய்தி சேகரிப்பு தமிழலை ஆனந்த்
திருவேற்காடு, ஆக . 22 –
இன்று திருவேற்காட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக வின் தலைவரும் ஆன கலைஞர் மு.கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி போற்றல் நிகழ்ச்சி திருவேற்காடு நகரப் பகுதியில் நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் விழாவில் சிறப்புரையாற்றி நலிந்த ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவேற்காடு நகர பகுதியில் இன்று 22/08/2021 ஞாயிற்றுக்கிழமை காலை10.00மணியளவில் மாவட்ட வார்த்தக அணி அமைப்பாளர் A.J.பவுல் அவர்கள் ஏற்பாட்டில் திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் அண்ணன் ஆவடி சா.மு.நாசர் அவர்கள் நேரில் வருகை தந்து தமிழின தலைவர் கலைஞர் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நலிந்த ஏழை எளியோர்க்கு தையல் மிஷின், அயன் பாக்ஸ், போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட துணைச்செயலாளர் நடுக்குத்தகை கே.ஜே.ரமேஷ் அவர்கள், திருவேற்காடு நகர செயலாளர் N.E.K மூர்த்தி அவர்கள் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பிரபு.கஜேந்திரன் மற்றும் வட்ட தி.மு.கழக 4வது வார்டு செயலாளர் .மா விநாயகம் ஐந்தாவது வார்டு வட்ட கழக செயலாளர் தெய்வசிகாமணி கழக தோழர்கள் சக்கரவர்த்தி புஷ்பராஜ், எ. ராமு தியாகராஜன் மற்றும் ஏராளமான பொதுமக்களும் இந் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.