திருவண்ணாமலை அக்.28-

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் திருக்கோயில்களின் வளர்ச்சிப்பணிகள் சாலை மேம்பாடு, கோவில் கிரிவலப்பாதை, கார்த்திகை தீபத்திருவிழா ஏற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு ரூ.55.45 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை  பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆகியோர்கள் நேற்று (27.10.2021) வழங்கினார்கள்.

    திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த் துறை சார்பில்; 2 பயனாளிகளுக்கு ரூ.2.00 லட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சரின் பொது நிவாரணத்தொகையும், 10 பயனாளிகளுக்கு தலா ரூ.12,000 வீதம் மொத்தம் ரூ.1.20 இலட்சம் மதிப்பீட்டில் முதியோர் ஓய்வூதியம் மற்றும் விதவை ஓய்வூதியத்திற்கான உதவித்தொகையும்  வழங்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் கிராமக் கோயில் பூசாரிகள் நலவாரியத் திட்டத்தின் கீழ் 7 பூசாரிகளுக்கு அடையாள அட்டை வழங்குதலும், திருக்கோயில்களில் முடி இறக்கும் 8 பணியாளர்களுக்கு தலா ரூ.5,000 வீதம் மொத்தம் ரூ.40,000 மதிப்பீட்டில் ஊக்கத் தொகையும், திருக் கோயில்களில் அன்னதானத் திட்டத்திற்கு உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் போக் சான்றிதழ் வழங்கும் திட்டத்தின் கீழ் 7 திருக்கோயில்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது.

   

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் மூலம் 13 பயனாளிகளுக்கு தலா ரூ.3.00 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.39.00 இலட்சம் மதிப்பிலான கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு இறந்த பெற்றோர் (அ) பெற்றோரில் ஒரு நபரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி அளித்தல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.1.00 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.2.00 இலட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியும், 5 பயனாளிகளுக்கு தலா ரூ.17,000 வீதம் மொத்தம் ரூ.85,000 மதிப்பில் இயற்கை மற்றும் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகையும், 108 ஆம்புலன்ஸ் காப்பீடு நிவாரணத் தொகை மூலம் பணிக் காலத்தில் இறந்த 2 நபர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5.00 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.10.00 இலட்சம் மதிப்பிலான காப்பீடு நிவாரணத் தொகையும், என மொத்தம் 56 பயனாளிகளுக்கு 55.45 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு துறைகளை சார்ந்த பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை  பொதுப்பணித் துறை அமைச்சர் மற்றும்  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோர்கள் வழங்கினார்கள்.

                                 முன்னதாக, இந்து சமயம் அறநிலையத்துறையின் சார்பில்  பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோர்கள் அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில்களில் பக்தர்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வந்த தங்க ரத தேரினை இழுத்து தொடங்கி வைத்து, ஓதுவார் பயிற்சி பள்ளியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, பார்வையிட்டார்கள். திருக்கோயில் அலுவலக வளாகத்தில் கலைஞர் தலமரக்கன்றினை நட்டு வைத்தார்கள். திருக்கோயிலில் மருத்துவ முதலுதவி மையத்தினை தொடங்கி ஆய்வு செய்தார்கள்.

            திருவண்ணாமலை நகராட்சி ஈசான்ய லிங்க மைதானம் அருகில் இந்து சமயம் அறநிலையத்துறையின் சார்பில் பக்தர்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதியினை குத்துவிளக்கேற்றி, கல்வெட்டினை திறந்து வைத்து பக்தர்கள் தங்கும் விடுதியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். மேலும், திருவண்ணாமலை செங்கம் சாலையில் கட்டப்பட்டு வரும் அருளாளர் அருணகிரிநாதர் மணிமண்டபத்தின் கட்டடப் பணியினையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

             

இந்நிகழ்ச்சியில்,  தமிழ்நாடு சட்டப் பேரவைத் துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, ஜெ.குமரகுருபரன்  மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி இ.கா.ப., திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி (செங்கம்), எஸ்.அம்பேத்குமார் (வந்தவாசி), பெ.சு.தி.சரவணன் (கலசபாக்கம்), கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மு.பிரதாப்  மாவட்ட வருவாய் அலுவலர் இரா.முத்துக்குமரசாமி, உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா, இணை ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை கஜேந்திரன், மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் திருமதி.பார்வதி சீனிவாசன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் திருமதி.பாரதி ராமஜெயம், அரசுத்துறை உயர் அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here