கும்பகோணம், ஜன. 28 –
கும்பகோணம் மையப்பகுதியான நகர மேல் நிலைப்பள்ளி அருகே டாக்டர் பெசன்ட் சாலையில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையம் 25 ஆண்டு காலத்திற்கு மேலாக இயங்கி மாதம் தோறும் 20 முதல் 23 லட்ச ரூபாய் வரை வியாபார பரிவர்த்தனைகளை செய்து வருகிறது.
இச்சேவை மையத்தினை பிஎஸ்என்எல் நிர்வாகம் தனியார் மருத்துவமனைக்கு வழங்க இருப்பதாக தெரிய வருகிறது. இது குறித்து மத்திய அரசுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பலரும் கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது மாத வாடகை 4 லட்சத்திற்கு தனியார் மருத்துவமனைக்கு வழங்க இருப்பதாக தெரிந்து பிஎஸ்என்எல் முன்னாள் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு உடனடியாக தலையிட்டு பொது மக்களுக்கு சேவை செய்யும் வகையில் தொடர்ந்து வாடிக்கையாளர் சேவை மையம் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முழக்கமிட்டனர்.
பேட்டி: கணேசன் கிளைத் தலைவர் கும்பகோணம் பிஎஸ்என்எல் ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்கம்





















