கும்பகோணம், ஏப். 23 –

கும்பகோணம் அருகேவுள்ள திருப்பிறம்பியம் அருள்மிகு திருசாட்சிநாதேஸ்வரர் திருக்கோயிலில் ராஜகோபுர வாயிலுக்கு வெளியே வலதுபுறம் தனிக்கோயிலில் அனுக்கிரக மூர்த்தியாக குரு பகவான் குடிகொண்டுள்ளார். மேலும் இச்சிறப்பு தமிழ்நாட்டிலேயே இத்திருக்கோயிலில் மட்டுமே காண தக்கதென்பது மேலும் அதன் சிறப்பாகும்.

மேலும் நேற்று இரவு குரு பெயர்ச்சி நடைப்பெற்றதை முன்னிட்டு குரு பகவானுக்கு இத்திருக்கோயில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் அதைத்தொடர்ந்து சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் இத்திருக்கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது  செட்டிப் பெண்ணுக்கு இறைவன் சாட்சிசொன்ன தலமென்பது தொன்நம்பிக்கையாகும் (ஐதிகம்). மேலும், தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 46வது தலமாகவும் இத்திருக்கோயில் உள்ளது.

மேலும் இத்திருக்கோயில் மதுரை ஆதினத்திற்கு கோயிலாகும். இத்தகைய சிறப்பு பெற்ற தலத்தில் ராஜகோபுர வாயிலுக்கு வெளியே வலதுபுறம் தனிக்கோயிலில் அனுக்கிரக மூர்த்தியாக குரு பகவான் குடிகொண்டுள்ளார். தமிழகத்திலேயே தனிக்கோயிலில் குரு பகவான் எழுந்தருளி அருள் வழங்கும் திருத்தலம் இது .என்பது குறிப்பிடத் தக்கதும் சிறப்புமிக்கதாகும்.

மேலும் இத்திருத்தலத்தில் சனகாதி முனிவர்களுக்கு நான்கு வேதங்களை உபதேசிக்கும் அற்புதமூர்த்தியாகவும் தட்சிணாமூர்த்தி விளங்குகிறார். வாரந்தோறும் வியாழக்கிழமையில் நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டால் கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், தொழில் போன்றவற்றுக்கு அருள்பாலிக்கும் தென்முகக் கடவுள். அருள் பாலிக்கிறார்.

மேலும் இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில்  ஒவ்வொரு ஆண்டும் குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சி அடைவது வழக்கமான ஒன்று. இருந்தபோதிலும் குரு பகவானின் உச்சம் பெற்ற ராசிகள் பல விதமான பலன்களைப் பெற்றுச் செழிப்புடன் இருப்பார்கள் என்பது ஐதீகம். அந்த வகையில், சனிக்கிழமையான நேற்றிரவு, 11.27 மணிக்கு மீன ராசிலிருந்து மேஷ ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைந்தார். இந்த குருப் பெயர்ச்சி விழாவை முன்னிட்டு சரியாக 11,27 இத்திருத்தலத்தில் சிறப்புப் பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அவர்கள் மேஷம், ரிஷபம், கன்னி, கடகம், விருச்சிகம், மகரம், கும்பம் போன்ற ராசிகளுக்கு அர்ச்சனை பரிகாரம் செய்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here