பொன்னேரி, ஏப். 26 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பள்ளிபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்றது, அருள்மிகு ஸ்ரீ பெரியாண்டவர் ஆலயமாகும்.
மேலும், அவ்வாலயத்தின் கும்பாபிஷேத்தை நடத்திட அவ்வாலய திருப்பணிக்குழு மற்றும் அக்கிராம மக்கள் தீர்மானித்து, அதற்கான அவ்வாலயத் திருப்பணிகள் பக்தர்கள் நிதி உதவியுடன் புனரமைப்பு பணிகள் நடைப்பெற்று முடிவடைந்த நிலையில் அவ்வாலயத்தின் அஷ்டபந்தன கும்பாபிஷேகம் கடந்த 25 ஆம் தேதி நடைப்பெற்றது.
முன்னதாக கணபதி ஹோமம், முதல் கால யாக பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, கோ பூஜை, உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்று மேலும், பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.
அந்நிகழ்வின் போது அவ்வாலய கும்பாபிஷேக விழாவினைக் காண வந்த பக்தர்கள் ஓம் சிவாய நமசிவாய என முழக்கமிட்டு மனம் மகிழ்ந்து கோபுர மற்றும் சாமி தரிசனம் செய்தனர்,
தொடர்ந்து அப்புனித நீரானது பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது மேலும் இவ்விழாவில், பள்ளிபாளையம், தேவம்பட்டு, சேலியம்பேடு, உள்ளிட்ட அக்கிராமத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த திரளானப் பக்தர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.
மேலும் இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவ்வாலய திருப்பணிக்குழு மற்றும் அக்கிராம மக்கள் வெகுச் சிறப்பாக செய்திருந்தனர்.




















