திருவாரூர், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரூ.16 கோடியே 95 லட்சம் மதிப்பில் எம்.ஆர்.ஜ. ஸ்கேன், ஆஞ்சியோகிராம் (கேத் லேப்) சிறப்பு சிகிச்சை மற்றும் மருத்துவ உபகரணங்கள் மக்கள் பயன் பாட்டிற்கான கொண்டு வரும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
மேலும் அச்சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமை தாங்க, நாகை எம்.பி. செல்வராஜ், திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி கே.கலைவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று எம்.ஆர்.ஜ.ஸ்கேன், ஆஞ்சியோகிராம் மற்றும் மருத்துவ உபகரணங்களை மக்கள் பயன்பாட்டிற்கு துவங்கி வைத்தார்.
அப்போது அவர் உரை நிகழ்தும் போது, தமிழக அரசு மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் உரிய முறையில் அதனைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காப்பீடு திட்டத்தின் கீழ் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இலவசமாக எடுக்கப்பட வேண்டும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.
மேலும் எம்ஆர்ஐ ஸ்கேன் காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக எடுக்கப்பட வேண்டும். காப்பீடு திட்டத்தின் அட்டை இல்லாதவர்களுக்கும் தனி அலுவலர்களை நியமித்து மருத்துவமனை நிர்வாகம் காப்பீடு அட்டை வழங்கி அவர்களுக்கும் இலவசமாக ஸ்கேன் எடுக்க வழிவகை செய்ய வேண்டும். எனவும், அடுத்த முறை ஆய்வுக்கு வரும் போது அனைவருக்கும் இலவசமாக எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டதை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என அப்போது அவர் தெரிவித்தார். மேலும் அந்நிகழ்வில் மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.




















