கும்பகோணம், டிச. 25 –
பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதி தமிழ்நாட்டில் சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது. அதுபோல் நேற்று தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரில், தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, கும்பகோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு திராவிட கழக மாவட்ட தலைவர் நிம்மதி, தலைமையில் பெரிய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அதில் பொதுக்குழு உறுப்பினர் குருசாமி, மாநகரத் தலைவர் ரமேஷ், மாநகரச் செயலாளர் சிவகுமார், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட துணை செயலாளர் செல்வராஜ், மாநகர செயலாளர் ராஜ்குமார், மாநகர பொருளாளர் வீரமுத்து, மகளிர் அணி பொறுப்பாளர் பாத்திமுத்து, மாற்றுத்திறனாளி பாதுகாப்போர் நல சங்க மாவட்ட செயலாளர் பழ. அன்புமணி, மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.




















