திருவள்ளூர், ஏப். 02 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி …

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட எல்லாபுரம் ஒன்றியத்தில் 19 ஆம் தேதி நடைப்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் எந்த கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும் பொறுப்பாளர்களும் ஆர்வம் காட்டாத நிலையில் இன்று திடீரென இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் ஐஏஸ் ஆதரித்து திமுக-வினர் மிகுந்த சுறுசுறுப்புடன் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் திமுக கிழக்கு மாவட்டம் எல்லாபுரம் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் திருவள்ளூர் (தனி) தொகுதியில் இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுகச் செயலாளர் பி.ஜே.மூர்த்தி தலைமையில் தாராட்சி ஊராட்சியில் தொம்பரமேடு, ஆலங்காடு பால்ரெட்டி கண்டிகை மற்றும் தாமரைகுப்பம் ஆகிய கிராமங்களில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் போது தாமரைக் குப்பம் கிராமத்தில் பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லை என அப்பகுதி வாழ் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். தேர்தல் முடிந்தவுடன் சாலை வசதி மற்றும் பேருந்து வசதி செய்து தரப்படும் என வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுகவினர் வாக்குறுதி அளித்தனர்.

மேலும் அந்நிகழ்ச்சியில் தேர்தல்  மேலிட பார்வையாளர் வெங்கடாஜலபதி மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் தண்டலம் என்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட நிர்வாகி எ.வி.ராமமூர்த்தி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கே.வி.லோகேஷ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சங்கர், மாவட்ட வழக்கறிஞர் அணி சீனிவாசன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் சம்பத், ஆதிராவிட நலக்குழு துணை அமைப்பாளர் பழனி ஆகியோர் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here