தஞ்சாவூர்,ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
கடந்த முறையை விட இந்த முறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நமது வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் எனவும், மேலும் கடந்த தேர்தலில் நமது எதிராளிகள் எல்லாம் ஒன்றாக வந்தார்கள். ஆனால் இந்த முறை தனித் தனியாக பிரிந்து வருகிறார்கள் அதனால் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் முரசொலியை வெற்றி பெற வைக்க போகிறீர்கள் என வாக்காளர்களிடம் வினா எழுப்பினார் அமைச்சர் உதயநிதி.
மேலும் நான் உங்களுக்கு ஒரு வாக்குறுதி கொடுக்கிறேன் குறைந்தது 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முரசொலியை வெற்றி பெற செய்ய வேண்டும் செய்வீர்களா ? என்றைக்கும் முரசொலிக்கு தோல்வியே கிடையாது எனவும் எப்போதும் வெற்றிதான். எதிர்த்து எந்த கொம்பன் போட்டியிட்டாலும் அவர்கள் டெபாசிட் போகும் அளவிற்கு முரசொலியை நான்கு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தால் மாதத்திற்கு இரண்டு முறை தஞ்சை தொகுதிக்கு வருவேன் தஞ்சை பாராளுமன்ற தொகுதிக்கு தேவையான அத்தனை வசதிகளையும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று 100% அதையெல்லாம் செய்வேன். இது எனது வாக்குறுதி. நான் வாக்கு உறுதி கொடுத்தால் நிச்சயம் காப்பாற்றுவேன். கலைஞர் பேரன் சொன்னால் செய்வேன். நீங்களும் அண்ணா கலைஞர் பெரியாரின் பேரன்கள்தான். நாம் எல்லோரும் ஒரே குடும்பம்தான். இது குடும்ப கட்சிதான். நாம் அனைவரும் ஒரே குடும்பம்தான். நாம் அனைவரும் கொள்கை பேரன்கள் இலட்சிய பேரன்கள் நமது ஒரே கொள்கை ஒரே லட்சியம் இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தர வேண்டும்.என்பது மட்டுமே தற்போது முன் இருப்பது.
கடந்த தேர்தலில் பாஜகவை ஓட ஓட விரட்டினீர்கள். இந்த தேர்தலில் ஓட ஓட உதைக்க வேண்டும். கடந்த முறை கோ பேக் மோடி என்று சொன்னோம். இந்த முறை கெட்ட அவுட் மோடி என்று சொல்கிறோம். கடந்த மூன்று ஆண்டுகளில் விவசாயிகளுக்கு திராவிட மடல் அரசு பல்வேறு திட்டங்களை கொடுத்தார். அவற்றில் சிலவற்றை சொல்கிறேன். வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட் கொடுத்தது நமது அரசுதான். பயிர் காப்பீட்டு தொகை 5000 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய்க்கு தரப்படும் என நமது தலைவர் வாக்குறுதி அளித்துள்ளார். ஒரு லிட்டர் பெட்ரோல் 75 ரூபாய்க்கு தருவேன் என நமது தலைவர் வாக்குறுதி அளித்துள்ளார். ஒரு லிட்டர் டீசல் 65 ரூபாய்க்கு தருவேன் என வாக்குறுதி கொடுத்துள்ளார் செய்வார் என நம்பிக்கை இருக்கிறதா.என வினாவிய அவர், தொடர்ந்து இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து டோல் கேட்டுக்களும் அகற்றப்படும் என வாக்குறுதி கொடுத்துள்ளார்.
எனவே அவை அனைத்தும் நிறைவேற ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குச்சாவடிக்கு சென்று நமது வேட்பாளர் முரசொலி பெயர் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஜூன் 4-ஆம் தேதி முதல் இடத்திற்கு வர வேண்டும் அதை செய்வீர்களா. முத்தமிழ் கலைஞருக்கும் முரசொலிக்கும் இடையே உள்ள தொடர்பு உங்களுக்கு தெரியும் எனது மூத்த பிள்ளை முரசொலி என பெருமையாக சொல்லி இருக்கிறார் நமது தலைவர் கலைஞர் அவர்கள். அந்த மூத்த பிள்ளை முரசொலிக்கு வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். அவர் வீட்டில் இருந்த நேரத்தை விட முரசொலி அலுவலகத்தில் இருந்து உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதிய நேரம்தான் அதிகம் அப்படிப்பட்ட அந்த முரசொலியின் பெயர் கொண்ட வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். 1942 ல் தொடங்கப்பட்ட முரசொலியை 2006 இல் கலைஞர் உயிரோடு இருந்தபோது என்னை நிர்வாக இயக்குனராகவும் ஆசிரியராகவும் பொறுப்பு கொடுத்தவர் முத்தமிழ் கலைஞர் அவர்கள் அந்த உரிமையில் இந்த வேட்பாளர் முரசொலிக்கு வாக்கு கேட்டு வந்திருக்கின்றேன். முரசொலியின் 75 ஆவது ஆண்டு பவள விழாவை நமது தலைவர் தலைமையில் நான் முன் நின்று நடத்தினேன். அந்த உரிமையில் நமது வேட்பாளர் முரசொலிக்கு வாக்கு கேட்டு வந்திருக்கின்றேன். இவரை நாலு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். அப்படி வெற்றி பெற செய்தால் தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயம் நமது தலைவர் செய்து காட்டுவார். முதலமைச்சர் யாருடைய காலையும் பிடித்து முதலமைச்சராக குறுக்கு வழியில் வரவில்லை. மக்கள் அன்பைப் பெற்று மக்கள் வாக்கை பெற்று முதலமைச்சராக வந்தவர்தான் நம் தலைவர். அரசு டவுன் பஸ்ஸில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற திட்டத்தை முதலில் கையெழுத்து போட்டு கொண்டு வந்தார். தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் பெண்கள் 460 கோடி பயணங்கள் செய்து இருக்கின்றார்கள். தஞ்சை மாவட்டத்தில் மட்டும் மூன்று ஆண்டுகளில் 13 கோடியே ஐயாயிரம் பயணங்கள் மேற்கொண்டு இருக்கிறீர்கள். அந்த பஸ்சை பிங்க் பஸ் என்று சொல்வதில்லை ஸ்டாலின் பஸ் என்றுதான் சொல்கிறார்கள். பத்தாயிரம் மாணவிகள் பெண்கள் புதுமை திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர்.
இந்த திட்டம் ஆண்களுக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தார். தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 61 ஆயிரம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். கலைஞர் மகளிர் உரிமை திட்டம் ஒரு கோடியே 60 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கண்டிப்பாக தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் நிச்சயம் நிறைவேற்றிக் கொடுப்பார். தமிழகத்தில் ஒரு கோடியே 16 லட்சம் பேர் பயன்படுகின்றனர் என அமைச்சர் பரப்புரையை மேற் கொண்டார்.
தொடர்ந்து அவர் குறிப்பிடுகையில் பத்து வருஷம் இந்தியாவை மோடி ஆட்சி செய்து உள்ளார். தமிழக மக்களுக்கு உருப்படியாக ஏதாவது செய்து இருக்கிறாரா. வெள்ள பாதிப்பாக 34,000 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு இருக்கிறோம். பிரதமர் மோடி அவர்கள் தமிழக மக்களுக்கு ஏதாவது செய்தாரா. பாதம் தாங்கி பழனிச்சாமி என பெயரின் நமது தலைவர் மாற்றி உள்ளார். தவழ்ந்து தவழ்ந்து சென்று சசிகலாவின் காலை பிடித்து முதலமைச்சர் பதவிக்கு வந்த பழனிச்சாமி சசிகலா சிறைக்கு சென்றவுடன் அவரது காலை வாரி விட்டவர். உதயநிதி ஸ்டாலின் ஒரே மாதிரி பேசுவதாக சொல்கிறார். அம்பேத்கர் பெரியார் அண்ணா கலைஞர் அவர்களின் கொள்கைதான் என் கொள்கை. அதனால் ஒரே மாதிரிதான் தன்னால் பேச முடியும். எனவும், மாற்றி மாற்றி பேச நான் ஒன்றும் பாதம் தாங்கி பழனிச்சாமியல்ல எனவும்,
மேலும் பழனிச்சாமி எப்போதும் மூன்று நிலையில் இருப்பார் அதனபடி மோடியை பார்த்தா தரையோடு படுத்து விடுவீர்கள். அமித்ஷாவை பார்த்தால் குட்டிக்கரணம் அடிப்பீர்கள். உங்களைப் போன்ற பச்சைத் துரோகி நான் கிடையாது. எனவும் நாங்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகத்தான் பெண்களுக்கான உரிமைத் தொகை கொடுக்கப்படுகிறது என எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறார். எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அழுத்தம் கொடுத்திருக்க வேண்டியதுதானே. ஜூன் 3ஆம் தேதி கலைஞர் பிறந்த நாள். ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை. 40 க்கு 40 என்ற வெற்றியை பெற்று கலைஞரின் பிறந்தநாள் பரிசாக அவரது காலடியில் வைக்க வேண்டும். என்றார்.
























