காஞ்சிபுரம், பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…
காஞ்சிபுரம் மாவட்டம். அதிமுக மாவட்டம் சார்பில் நேற்று பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமையில் ஏராளமான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கி அவர்கள் அத்தலைவரின் பிறந்த நாளினைக் கொண்டாடினார்கள்.
நேற்று மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் காஞ்சிபுரம் பஸ் நிலையம், மாநகராட்சி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஒரிக்கை, பூக்கடை சத்திரம், காந்தி சாலை பெரியார் தூண், மாகறல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல்வேறு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமையில் அதிமுக முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
மேலும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அனைத்து இடங்களிலும் பட்டாசுகக் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், ஏழை எளிய மக்களுக்கு காலை அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
வெகு சிறப்பாக நடைப்பெற்ற பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன்,மைதிலி திருநாவுக்கரசு,மாவட்ட அவைத்தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி,மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம்,பகுதி கழக செயலாளர்கள் பாலாஜி,கோல்ட் ரவி,ஜெயராஜ்,ஒன்றிய செயலாளர்கள் தும்பவம் டி.ஜீவானந்தம், களக்காட்டூர் ராஜீ மற்றும் மாவட்ட ஒன்றிய மாநகர கட்சி முக்கிய நிர்வாகிகளும்,தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.