பொன்னேரி, ஏப். 15 –

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் அடங்கிய வார்டு 26 வேம்பாக்கம் பஜார் பகுதியில்,திமுக சார்பில் நீர் ,மோர், பந்தல் திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது,

இவ் விழாவிற்கு வார்டு கவுன்சிலர் கவிதாவிஜி தலைமை வகித்தார், பொன்னேரி நகராட்சியின் தலைவர் டாக்டர். பரிமளம் விஸ்வநாதன். மீஞ்சூர் ஒன்றிய திமுக செயலாளர்கள் வல்லூர் எம், எஸ் ,கே, ரமேஷ்ராஜ். சுகுமாரன்,  வேம்பாக்கம் ஈஸ்வரி ராஜா, மாவட்ட பிரதிநிதி தமிழரசன் ,உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

 

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருவள்ளூர் கிழக்கு மாவட்ட  திமுக செயலாளரும் ,மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி,ஜே, கோவிந்தராஜன் நீர், மோர், பந்தலை திறந்து வைத்தார். அங்கு கூடியிருந்த அனைவருக்கும் முதல் நாள் என்பதால் தர்பூசணிபழம், வெள்ளரிப்பிஞ்சு, இளநீர், குளிர்பானங்கள் உள்ளிட்டவைகளை வழங்கினார்.

 

இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக அம்பேத்கரின் 131 வது பிறந்த நாளை முன்னிட்டு புரட்சியாளர் அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் திருவுருவப்படத்தை  நிறுவி மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.

 

அதனை தொடர்ந்து நலிந்த தொழிலாளர்கள் 7 நபர்களுக்கு தையல் மிஷின், 10 நபர்களுக்கு இஸ்திரி பெட்டி மற்றும் அப்பகுதி பொதுமக்களுக்கு அன்னதானம், தாய்மார்களுக்கு புடவைகள்  உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும்  வழங்கினார்.

 

நிகழ்ச்சியில் தடபெரும்பக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாபு, வேம்பாக்கம் பி.கே .ராஜசெல்வம், உள்ளிட்ட திரளான கட்சித் தொண்டர்கள் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here