ராமநாதபுரம், ஆக. 17- ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா தொடக்கப் பள்ளியின் முன்னாள் மாணவர்களின் சங்கமம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடந்தது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மேலத் தெருவில் அமைந்துள்ள ஹமீதியா தொடக்கப் பள்ளி 1934ம் ஆண்டு முதல் வெகு சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழ் வழி கல்வியகம். இங்கு பயின்ற பலர் மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடைந் துள்ளனர். குறிப்பாக அரசு துறைகளில் அதிகாரி களாகவும், பல நூறு பேர்களுக்கு வேலை வாய்ப்பு தரும் வகையில் பெரும் தொழிலதிபர் களாகவும், பல அறிஞர்களை உருவாக்கும் ஆசிரியர் களாகவும், பேராசிரியர் களாகவும் உருவாகி யுள்ளனர். மிகவும் பழமையான பிரபலமிக்க கீழக்கரை ஹமீதியா தொடக்கப் பள்ளியில் 1986ம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு “இ” பிரிவில் பயின்ற மாணவ மாணவிகள் சுமார் 75க்கும் மேற் பட்டோர் இன்று பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர். இந்த மாணவர்களில் சுமார் 40 பேர் தாங்கள் பயின்ற பள்ளியில் மீண்டும் சங்கமிக்கும் நிகழ்ச்சியை ஏற்படுத்தினர். இதற்காக கடந்த ஒராண்டுக்கும் மேலாக முன்னாள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்கள், அப்போதைய தலைமை ஆசிரியர், அதன்பின் வந்த தலைமை ஆசிரியர் என பலரையும் தேடி அவர்கள் வசிக்கும் இடத்திற்கே சென்று கீழக்கரை ஹமீதியா பள்ளியில் 1986ம் ஆண்டு 5ம் வகுப்பு பயின்ற மாணவர்களின் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தியதின் பேரில் பணி ஓய்வு பெற்று 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் தற்போது வயதான காலத்தில் உடல்நிலை சரியில்லை என்றாலும் எப்படியும் முன்னாள் மாணவர்களின் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்ற உயர் நோக்கில் 1986ல் பணியாற்றிய ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் மற்றும் பலர் பங்கேற்றனர். 1986ல் கீழக்கரை ஹமீதியா தொடக்கப் பள்ளியில் தமிழ் வழியில் ஐந்தாம் வகுப்பு பயின்ற மாணவர்களில் பெரும் பாலனோர் இன்று மிகப்பெரிய பணியிலும், சிலர் துபாய் போன்ற வெளி நாடுகளில் பெரும் தொழில திபர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் மாணவர்கள் சங்கமம் என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்ற தகவல் அறிந்தவுடன் முன்னாள் மாணவர்கள் தங்கள் பணியை ஒதுக்கி வைத்து விட்டு வெளியூரில் இருந்தும் வெளி நாட்டிலிருந்தும் கீழக்கரையை நோக்கி வரத் துவங்கினர். கீழக்கரையில் தாங்கள் பயின்ற பள்ளியில் சுதந்திர தின விழாவை கொண்டாடி விட்டு அதன் பின்பாக முன்னாள் மாணவர்களின் சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கினர். இந் நிகழ்ச்சியில் அமீர் அப்துல்லா கிராத் ஓதினார். 1986ம் ஆண்டு 5ம் வகுப்பு “இ” பிரிவு மாணவர் ஜனாப் ஜபுருல்லா வரவேற்புரை ஆற்றிய போது, தானும் தனது சக மாணவ மாணவிகளும் 1986ம் ஆண்டில் கீழக்கரை ஹமீதியா தொடக்கப் பள்ளியில் பயின்ற போது கிடைத்த அனுபவங்களை சொல்லி பழைய நினைவுகளை அசை போட்டார். அப்போது விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பசுமை நிறைந்த கனவுகளே… !பாடி திரிந்த பறவைகளே…!! என்ற பாடல் வரிகள் பட்டாம் பூச்சியாக ஒலித்தது.
பள்ளி தாளாளர் ஜனாாப் சதக் இல்யாஸ் முன்னாள் மாணவர்கள் சங்கமம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசினார். பள்ளியின் முன்னாள் தாளாளர் ஜனாப் அக்பர் அலி தானும் இப்பள்ளியில் பயின்று தாளாளரான நிகழ்வை கூறியும் தனக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களின் உயர்ந்த சேவையை குறிப்பிட்டும் பேசினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஹமீது நிசா முன்னிலை வகித்து பேசும் போது தானும் இதே பள்ளியில் பயின்று இதே பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்து இன்று இதே பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி யாற்றுவதை பெருமையாக கருதுகிறேன். இது ஆண்டவன் எனக்கு அளித்த நல் வாய்ப்பு என மிக உருக்கமாக பேசினார். அதனை தொடர்ந்து முன்னாள் மாணவ மாணவிகள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். தாங்கள் பயின்ற வகுப்பறைக்கு சென்று பார்த்து பழைய நினைவுகளை கூறி சிரித்து மகிழ்ந்தனர். தங்களுக்கு பாடம் நடத்திய முன்னாள் ஆசிரியையுடன் போட்டோ எடுத்து நினைவு பரிசு வழங்கி மனம் விட்டு பேசினர். ஆசிரியர் களுக்கும் பழைய மாணவர் களுக்கும் சொல்ல முடியாத ஒரு சந்தோசம்… ஒரு மன நிறைவுடன் சங்கமம் நிகழ்ச்சியை பரிசு போட்டியுடன் நிறைவு செய்து ஒருவருக் கொருவர் பிரியா விடை கொடுத்து மீண்டும் ஆண்டு தோறும் இது போல் ஒன்று கூடுவோம் என கூறி அவர வர்கள் திசையை நோக்கி சென்றனர். விழாவில் முன்னாள் மாணவர் ரமீஸ்தீன் தங்களின் அழைப்பை ஏற்று வருகை தந்த மாணவ மாணவி களுக்கும், தாளாளர், முன்னாள் தாளாளர், தலைமை ஆசிரியர், முன்னாள் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அனை வருக்கும் மனம் உருகி நன்றி தெரிவித்தார்.
முகப்பு சிறப்புக் கட்டுரைகள் பசுமை நிறைந்த கனவுகளே…! பாடித்திரிந்த பறவைகளே…!! கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளி 1986ம் ஆண்டு 5ம் வகுப்பு...