பொன்னேரி, மார்ச். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் திருவள்ளூர் (தனி) தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை அறிமுகம் படுத்தும் நிகழ்ச்சியும் மற்றும் தேர்தல் பணிமனை திறப்பு விழா நிகழ்ச்சியும் மீஞ்சூர் அடுத்த வல்லூரில் அமைந்துள்ள ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய திமுக செயலாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் தலைமை வகித்தார். வேட்பாளர் சசிகாந்த் செந்தில், மாவட்ட அவைத் தலைவர் மு.பகலவன், திருவள்ளுர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் துரை சந்திரசேகர், உள்ளிட்டவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தேர்தல் பணிமனையை திறந்து வைத்தனர்.
முன்னதாக வேட்பாளர் சசிகாந்த் செந்திலை இந்தியா கூட்டணி கட்சியின் தொண்டர்கள் மத்தியில் ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ் அறிமுகப்படுத்தி பேசினார். அதனைத் தொடர்ந்து பேசிய வேட்பாளர் சசிகாந்த் செந்தில் அனைவரது முன்னிலையில் கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். மேலும் பொன்னேரியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சரமான உதயநிதி ஸ்டாலின் பேசுகையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்றோம் அதில் பொன்னேரி தொகுதியில் திமுக செயலாளராக ரமேஷ்ராஜ் கடினமாக உழைத்தார் என பாராட்டி பேசியதாகவும் தெரிவித்தவர் அதேப் போன்று இம்முறை இந்த பகுதியில் கைச்சின்னத்திற்கு பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொண்டார்.
அதில் திரளான இந்தியா கூட்டணி கட்சித் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர் முன்னதாக கலைஞரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
























