ஈரான்: நெடுஞ்சாலையில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழப்பு
டெஹ்ரான்:
ஈரான் நாட்டு தலைநகரான டெஹ்ரான் - கோம் நெடுஞ்சாலை வழியாக இன்று சுமார் 50 பயணிகளுடன் வந்த ஒரு பஸ், கெர்மான் நகரின் மத்திய பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, தறிகெட்டு ஓடி, சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்ததாகவும்,...
வெனிசூலா எல்லையில் கலவரம் – 2 பேர் பலி
கராக்கஸ்:
வெனிசூலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அரசியல் குழப்பமும் தொடர்ந்து நீடிக்கிறது. வெனிசூலாவின் இடைக்கால அதிபராக தன்னை அறிவித்துக்கொண்ட ஜூவான் குவைடோக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்ததால், அந்த நாடுகளிடம் இருந்து மனிதாபிமான உதவிகளை பெற அதிபர் நிகோலஸ் மதுரோ மறுக்கிறார்.
உதவி பொருட்களை கொண்டு வரும் வாகனங்கள்...
நெருக்கடிக்கு பணிந்து மசூத் அசார் சகோதரர் உள்பட 44 பயங்கரவாதிகளை பாகிஸ்தான் கைது செய்தது
இஸ்லாமாபாத்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் 14-2-2014 அன்று ஜெய்ஷ்-இ-முஹம்மத் பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவுபெற்ற பயங்கரவாத நடத்திய தற்கொலைப்படை தாக்குதலை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பதட்டம் நிலவுகிறது.
பயங்கரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா மற்றும் சர்வதேச நாடுகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன.
பாகிஸ்தானில்...
மோடிக்கு சியோல் அமைதி விருது வழங்கி கவுரவித்தது தென்கொரியா
சியோல்:
இந்திய மற்றும் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியதற்காகவும், பல்வேறு நடவடிக்கைகள் மூலம் உலக அமைதிக்குப் பங்களிப்பை வழங்கியமைக்காகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு, தென் கொரிய நாட்டின் உயரிய விருதான சியோல் அமைதி விருது அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது 2 நாள்கள் சுற்றுப்பயணமாக தென்கொரியா சென்றுள்ள...
சாண்ட்விச் திருடியதாக குற்றச்சாட்டு: பதவியை ராஜினாமா செய்த ஸ்லோவேனிய எம்பி
லியுப்லியானா:
ஸ்லோவேனியாவின் ஆளுங்கட்சியான எல்எம்எஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தரிஜ் கிரஜ்சிச் (வயது 54). இவர் சமீபத்தில் லியூப்லியானா நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு சாண்ட்விச் வாங்க சென்றுள்ளார். அப்போது சிறிது நேரத்தில் அங்கிருந்த சாண்ட்விச் ஒன்றை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார்.
அவர் சாண்ட்விச்சை திருடியதாக குற்றச்சாட்டு எழுந்தது....
வெனிசுலா அதிபர் மதுரோவின் நாட்கள் எண்ணப்படுகின்றன-அமெரிக்கா மறைமுக எச்சரிக்கை
கராகஸ்:
வெனிசுலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அரசியல் குழப்பமும் தொடர்ந்து நீடிக்கிறது. வெனிசுலாவின் இடைக்கால அதிபராக தன்னை அறிவித்துக்கொண்ட ஜூவான் குவைடோவுக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்ததால், அந்த நாடுகளிடம் இருந்து மனிதாபிமான உதவிகளை பெற அதிபர் நிகோலஸ் மதுரோ மறுக்கிறார்.
ஆனால் உதவி பொருட்களை கொண்டு வரும்...
ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஜா பற்றி துப்பு கொடுத்தால் ரூ.7 கோடி பரிசு – அமெரிக்கா அறிவிப்பு
வாஷிங்டன்:
அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான ஒசாமா பின்லேடன் கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் நகரில் பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து தனது தந்தையை கொன்றதற்காக அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் பழிக்குப்பழி வாங்குவேன் என ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்ஸா பின்லேடன் எச்சரித்திருந்தார்.
பின்லேடனுக்கு...
இந்தியா மீது ஒரு அணுகுண்டு போட்டால் 20 குண்டுகளால் அவர்கள் பாகிஸ்தானை அழித்து விடுவார்கள்-முஷரப்
துபாய்:
புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்ததை குறிப்பிட்டு சமீபத்தில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதம் தொடரும்வரை உலகில் அமைதி நிலவும் சாத்தியம் இல்லை என்று தெரிவித்தார்.
நமது எல்லையில் காவல் இருக்கும் வீரர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். மோடி அரசின் மீதும் நம்பிக்கை வையுங்கள். இந்த முறை...
வெனிசுலாவில் அரசியல் நெருக்கடி-குவைடோவை ஆதரித்து புளோரிடாவில் உரையாற்றுகிறார் டிரம்ப்
வாஷிங்டன்:
எண்ணெய் வளம் மிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசியல் குழப்பமும் நீடிக்கிறது. அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற நிகோலஸ் மதுரோ, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், பதவியேற்றார். ஆனால் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும், மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும்...
தமிழக மீனவர்கள் 5 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
கொழும்பு:
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் 5 பேரும் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
தலைமன்னார் கடற்படை முகாமில் வைத்து கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படை விசாரித்து வருகிறது....



















