பொன்னேரி, செப். 27 –

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பொன்னேரி டாக்டர்.அம்பேத்கர் சிலை அருகில் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு கோயில்கள் இருக்கும் தெருவில் பட்டியல் இனத்தவர் நடந்து செல்கிறார்கள் என்றால் அது பெரியார் போட்ட பிச்சை என்று பேசினார். இந்த பேச்சு தமிழகத்தில் சர்ச்சைக்கு உள்ளானது. இந்த நிலையில் இதனை கண்டித்து பொன்னேரியில் புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராஜா தலைமையில் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here