மும்பை தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்-உத்-தவாவுக்கு தடை-பாகிஸ்தான் நடவடிக்கை
இஸ்லாமாபாத்:
கடந்த 2008-ம் ஆண்டு, மும்பையில் நடந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது, ஹபீஸ் சயீது தலைமையிலான ஜமாத்-உத்-தவா பயங்கரவாத இயக்கம் ஆகும். புலவாமா தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் நிர்ப்பந்தம் அளித்து வருகின்றன. எனவே, ஜமாத்- உத்-தவாவுக்கும், அதன் அறக்கட்டளையான பலா-இ-...
ராணுவத்திற்கான பட்ஜெட்டை 177.61 பில்லியன் டாலர்களாக உயர்த்தியது சீனா
பீஜிங்:
உலகிலேயே ராணுவத்திற்கு அதிக செலவு செய்யும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த ஆண்டு அமெரிக்காவின் ராணுவ பட்ஜெட்டை நெருங்கி உள்ளது. 2015ம் ஆண்டு வரை இரட்டை இலக்க சதவீதத்தில் பட்ஜெட்டை உயர்த்திய சீனா, 2016ம் ஆண்டு 7.6 சதவீதமும், 2017ம்...
பிளாஸ்டிக் மாசுக்கு எதிராக களமிறங்கிய மலேசியா கிராம மக்கள்
கோலா லம்பூர்:
மலேசியாவின் பல்வேறு பகுதிகளிலும் பிளாஸ்டிக் குப்பைகள் குவிக்கப்பட்டு எரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் தொழிற்சாலைகளின் கழிவுகள் ஆகும். மேலும் பல நாடுகளில் இருந்தும் பிளாஸ்டிக் கழிவுகள் மலேசியாவிற்கு வந்து குவிந்துள்ளன.
இவற்றை அகற்றும் முயற்சியில் ஜெஞ்ரோம் பகுதியைச் சேர்ந்த டேனியல் டாய், டன் சிங் ஹின் ஈடுபட்டுள்ளனர். மேலும்...
தென்ஆப்பிரிக்காவில் விமானி என ஏமாற்றி 20 ஆண்டுகள் விமானம் ஓட்டிய என்ஜினீயர்
கேப்டவுன்:
தென்ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் வில்லியம் சாண்ட்லர். இவர் தென் ஆப்பிரிக்க அரசுக்கு சொந்தமான சவுத் ஆப்பிரிக்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தில் விமானி ஆக பணிபுரிந்தார்.
சம்பவத்தன்று தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஜெர்மனிக்கு விமானம் பயணம் செய்தது. சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலை தொடருக்கு மேல் பறந்த போது அதிர்வு ஏற்பட்டது.
அப்போது...
அணு ஆயுதங்களை கைவிடும் வரையில் வடகொரியாவுக்கு எதிர்காலம் இல்லை – டிரம்ப் திட்டவட்டம்
வாஷிங்டன்:
அணுஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வந்த வடகொரியாவுடன் அமெரிக்கா, கடந்த ஆண்டு பேச்சுவார்த்தை நடத்தியது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு பின்னர் அணுஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை...
பிரசார பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 14 பேர் பரிதாப பலி
அபுஜா:
நைஜீரியா அதிபராக பதவி வகித்து வரும் முகமது புஹாரியின் 4 ஆண்டு பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, நைஜீரியாவுக்கு வருகிற சனிக்கிழமை பொதுத்தேர்தல் நடத்தப்படுகிறது.
இதில் புஹாரி மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக முக்கிய போட்டியாளராக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில், நைஜீரியா முன்னாள் துணை அதிபர்...
சவுதி தூதரக அதிகாரியை கொன்றவருக்கு வங்காளதேசத்தில் மரண தண்டனை நிறைவேற்றம்
டாக்கா:
வங்காளதேசம் நாட்டுக்கான சவுதி அரேபியா தூதரகத்தில் பணியாற்றி வந்தவர் கலாப் அல் அலி(45). வங்காளதேசம் நாட்டின் தலைநகரான டாக்காவில் உள்ள குல்ஷான் பகுதியில் கடந்த 6-3-2012 அன்று ஒரு கும்பலால் கலாப் அல் அலி சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட 5...
ஒரு நாளுக்கு மேல் நாயை கட்டிப்போட்டால் 6 மாதம் சிறை: வங்காளதேசத்தில் புதிய சட்டம் வருகிறது
டாக்கா:
வங்காளதேசத்தில் 1920-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ‘விலங்குகள் நலச்சட்டம்’ விலங்குகளை கொடுமைப்படுத்துதல், பலி கொடுத்தல் போன்றவற்றில் ஈடுபடுவோருக்கு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்க வழிவகை செய்ததது.
இந்த நிலையில் 1920-ம் ஆண்டு சட்டத்தை அடிப்படையாக கொண்டு புதிய வரைவு சட்டம் ஒன்றை வங்காளதேச அரசு உருவாக்கி உள்ளது. இது...
இலங்கையில் வெளிநாட்டு நீதிபதிகள் மூலம் போர்க்குற்ற விசாரணை – தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தல்
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடந்த 2009–ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரின் போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் மாயமாகினர். இந்த போரின்போது இலங்கை ராணுவம் கடுமையான போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக புகார் உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த இலங்கை அரசுக்கு ஐ.நா. மனித உரிமை...
“சூப்பர் ஜம்போ ஏ380” விமான தயாரிப்பை நிறுத்தப்போவதாக ஏர்பஸ் நிறுவனம் அறிவிப்பு
துலூஸ்:
ஐரோப்பாவை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனம் ‘ஏர்பஸ்’. உலகிலேயே மிகப்பெரிய விமானமான ‘சூப்பர்ஜம்போ ஏ380’ ரக விமானங்களை இந்நிறுவனம் தயாரித்து வந்தது.
500 பயணிகள் அமரும் வண்ணம், 2 அடுக்குகளை கொண்ட ‘சூப்பர்ஜம்போ ஏ380’ விமானங்கள் கடந்த 2008-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளன.
இந்த நிலையில், ‘சூப்பர்ஜம்போ...




















