Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் மீது போலீசில் புகார்

புதுடெல்லி: டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.  இவரது கட்சியின் சின்னம் துடைப்பம்.  டுவிட்டரில் செய்திகளை வெளியிட்டு வரும் அவர் சமீபத்தில் சர்ச்சையில் சிக்கி உள்ளார். அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவொன்று மதஉணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ...

மீனவர்களுக்கு உதவ வேண்டும்: லட்சத்தீவு நிர்வாகத்துக்கு மத்திய அமைச்சர் எல். முருகன் உத்தரவு

லட்சத்தீவு, நவ, 1 - மீனவர்களுக்கு உதவ, விற்பனைத் துறையில் புதுமையான மற்றும் அறிவியல் பூர்வ யோசனைகளை பின்பற்ற வேண்டும் என  லட்சத்தீவு நிர்வாகத்துக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல். முருகன் உத்தரவிட்டார். லட்சத்தீவில் 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் எல். முருகன் நேற்று...

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார அடிப்படைக் கட்டமைப்பு இயக்கத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார அடிப்படைக் கட்டமைப்பு இயக்கத்தைத் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். வாரணாசிக்கான ரூ. 5,200 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் அவர் தொடங்கிவைத்தார். உத்தரப் பிரதேச ஆளுநர், முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள் டாக்டர். மன்ஷூக் மண்டாவியா, டாக்டர். மஹேந்திர நாத் பாண்டே,...

வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும் குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தம் வேண்டும்: வெங்கையா நாயுடு

புதுடெல்லி : தங்கள் சொந்த நாட்டில் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களை மீண்டும் தங்கள் நாட்டுக்கே கொண்டு வந்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துவது அந்தந்த நாட்டு அரசுகளுக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக...

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்-மோடி தலைமையில் அவசர ஆலோசனை

புதுடெல்லி: காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து இன்று டெல்லியில் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்த மந்திரி சபையை கூட்டினார். அதன்படி காலையில் மோடி தலைமையில் மந்திரிசபை அவசர ஆலோசனை நடத்த கூடியது. இதில் மத்திய மந்திரிகள்...

தேசிய நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றம்: நிதின்கட்கரி தகவல்

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தேசிய நெடுஞ்சாலைகளில், மதுக்கடைகளை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக மாநிலங்களவையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்  நிதின்கட்கரி தெரிவித்தார். அவர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது: உச்சநீதிமன்றம் கடந்த 2016 மற்றும் 2017ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவுகளில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டி  500 மீட்டர் தூரத்தில் உள்ள  மதுக்கடைகள், உள்ளாட்சி அமைப்புகளில் 20,000 மக்கள் தொகை உள்ள பகுதியாக இருந்தால் 220 மீட்டருக்குள் உள்ள மதுக்கடைகளுக்கு உரிமம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என கூறியிருந்தது. அதன்படி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டது.  மேலும், மோட்டார் வாகன சட்டத்தின் 185வது பிரிவின் கீழ் குடிபோதையில் வாகனம் ஓட்டினால், சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படுகிறது. அதோடு, அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் மூலம் குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ஏற்படும் அபாயம் குறித்த விழிப்புணர்வையும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்  மேற்கொள்கிறது. மதுக்கடைகள் மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், மதுக்கடைகள் அகற்றப்பட்ட தரவுகளை மத்திய அரசு  சேகரிக்கவில்லை. நவீன பேருந்து நிலையங்கள்: 12வது ஐந்தாண்டு திட்டத்தில் அமல்படுத்த,  நவீன பேருந்து நிலையங்கள் உருவாக்கும் திட்டத்தை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது.  நவீன பேருந்து நிலையங்கள் அமைக்க,  இத்திட்டம் நிதியுதவி அளிக்கும். இதற்கான மாற்றியமைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் 2018 செப்டம்பரில் வழங்கப்பட்டுள்ளன.

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமராவார்: சித்தராமையா

பெங்களூரு : முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சியான ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. அக்கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும். தனித்து போட்டியிடுவதாக...

புதிய தொழில் முனைவோருடன் நாளை பிரதமர் கலந்துரையாடவுள்ளார்… ஆறு மையப் பொருள்கள் குறித்து பிரதமர் முன்னிலையில் அவர்கள் விளக்கம்...

டெல்லி, ஜன. 14 - புதிய தொழில் முனைவோருடன் பிரதமர்  நரேந்திர மோடி 2022 ஜனவரி 15 நாளை காலை 10,30 மணிக்கு காணொலி காட்சி மூலம் கலந்துரையாடுவார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வேளாண்மை, சுகாதாரம், நிறுவன நடைமுறைகள், வின்வெளி, தொழில்துறை 4.0, ஃபின்டெக், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு...

ஐஐடி கான்பூர் டிசம்பர் 28 ல் பட்டமளிப்பு விழா : பிரதமர் மோடி உரையாற்றுகிறார்…

சென்னை, டிச. 22 - ஐஐடி கான்பூர் பட்டமளிப்பு விழா எதிர்வரும் டிசம்பர் 28 அன்று நடைப்பெற உள்ளது. அவ்விழாவில் பிரதமர் மோடி உரை நிகழ்த்த உள்ளார். பிரதமரின் உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு ஐஐடி கான்பூர், பிற ஐஐடி-க்களின் மாணவர்கள்,...

நான் தலித் என்பதால் முதல்வராக முடியவில்லை-பரமேஸ்வரா பேச்சு

தேவநகரி: கர்நாடக மாநிலம் தேவநகரி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கர்நாடக துணை முதல் மந்திரி பரமேஸ்வரா உரையாற்றினார். அப்போது அவர் கூறியிருப்பதாவது: தலித்களுக்கு எதிராக நடத்தப்பட்ட ஒடுக்கு முறைகளில் நானும் பாதிக்கப்பட்டேன். நான் தலித் என்பதால் தான் என்னால் முதல்வர் பதவிக்கு வர முடியவில்லை....
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS