Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பாரம்பரிய மீன்பிடித் தொழிலைக் காக்கவே புதிய மீன்வளச் சட்டம் கொண்டுவரப்படுகிறது: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன்

பாரம்பரிய மீன்பிடித் தொழிலைக் காக்கவே புதிய மீன்வளச் சட்டம் கொண்டு வரப்படுகிறது என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணையமைச்சர் டாக்டர். எல். முருகன் தெரிவித்தார். நெல்லூர், அக். 7 - மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு...

பெற்றோரை இழந்த குழந்தைகளை பராமரிப்பது நமது கூட்டுக் கடமை: குடியரசு துணைத் தலைவர்

தில்லி, ஆக 3 - பெற்றோரை இழந்த குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வது நமது கூட்டுக் கடமை ஆகும் என்று குடியரசு துணைத் தலைவர் எம் வெங்கையா நாயுடு நேற்றுக் கூறினார். இத்தகைய பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு இன்னும் விரிவான மற்றும் சிறப்பான பாதுகாப்பு தேவை என்றும்...

கொவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்

தில்லி, ஆக 3- ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சார்பில் கொவிட் – 19 பற்றிய அண்மைச் செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் பின் வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 47.85 கோடி கொவிட் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 3,08,96,354 பேர்  குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.38%. கடந்த 24 மணி நேரத்தில் 38,887  பேர்...

இந்திய ஆண்கள் ஹாக்கி குழுவினருக்கு பிரதமர் வாழ்த்துச் செய்தி

இன்று பிரதமர் அலுவலகச் செய்திக் குறிப்பில் நமது ஆண்கள் ஹாக்கி குழுவினர், டோக்கியோ 2020 போட்டியில் தங்களது சிறந்த திறனை வெளிப் படுத்தினார்கள், அதுதான் முக்கியம் என்று பிரதமர் அதில் குறிப்பிட்டு அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி செய்தி வெளியிட்டுவுள்ளார். டோக்கியோ 2020 போட்டியில் நமது ஆடவர் ஹாக்கி குழுவினர் தங்களது சிறந்த திறனை வெளிப் படுத்தினார்கள் என்றும், அதுதான் முக்கியமானது என்றும்,பிரதமர்  நரேந்திர மோடி கூறியுள்ளார். அடுத்து வரவிருக்கும் போட்டிக்கும், குழுவினரின் எதிர்கால முயற்சிகளுக்கும் பிரதமர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார். பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது: “வெற்றிகளும், தோல்விகளும் வாழ்வின் ஓர் அங்கம். டோக்கியோ  2020 போட்டியில் நமது ஆடவர் ஹாக்கி குழுவினர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப் படுத்தினார்கள், அதுதான் முக்கியம்.  வரவிருக்கும் அடுத்த போட்டிக்கும், குழுவினரின் எதிர்கால முயற்சிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். நம் வீரர்களால் இந்தியா பெருமை அடைகிறது என்று அதில்...

மின்சக்தி விநியோகத்துறை குறித்த அறிக்கை வெளியீடு !

மின்சக்தி வினியோகத்துறை குறித்த அறிக்கையை நிதி ஆயோக்கும், ஆர்எம்ஐ அமைப்பும் சேர்ந்து தயாரித்து வெளியீட்டுள்ளது. சென்னை, ஆக 3 - நமது நாட்டில் மின்சக்தி விநியோகத் துறையில் கொள்கை முடிவுகளை மேம்படுத்துவதற்குமான முயற்சியாக, இத்துறையை மாற்றியமைப்பதற்கான சீர்திருத்த வழிமுறைகளை பரிந்துரைக்கும் அறிக்கை ஒன்றை நிதி ஆயோக் இன்று வெளியிட்டுள்ளது. மின்சக்தி விநியோகத்...

54, 439 பேருக்கு மத்திய அரசின் பாராட்டுச் சான்றிதழ் – நிதித்துறை இணையமைச்சர் தகவல்

ஜிஎஸ்டி வரி செலுத்திய மற்றும் குறித்த நேரத்தில் ஜிஎஸ்டி தாக்கல் செய்த 54,439 பேருக்கு பாராட்டு சான்றிதழ்: மக்களவையில் தகவல் ஜிஎஸ்டி செலுத்தியதில் கணிசமான பங்களிப்பை அளித்தவர்கள், குறித்த நேரத்தில் ஜிஎஸ்டி தாக்கல் செய்த 54,439 பேருக்கு  மத்திய அரசு பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர்  பங்கஜ் சவுத்திரி தெரிவித்தார். மக்களவையில் அவர் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது: சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தி 4 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு,  ஜிஎஸ்டி செலுத்தியதில் கணிசமான பங்களிப்பை அளித்தவர்கள், குறித்த நேரத்தில் ஜிஎஸ்டி தாக்கல் செய்த 54,439 பேருக்கு  மத்திய அரசு பாராட்டு சான்றிதழ் வழங்கியது. தமிழகத்தில் 5589 பேருக்கும், புதுச்சேரியில் 47 பேருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளார். மொத்த உணவுதானிய உற்பத்தி 305.44 மில்லியன் டன்னாக அதிகரிக்கும் : தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்ட 2020-21 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) தற்காலிக மதிப்பீடுகளின்படி, விவசாயத்தின் மொத்த மதிப்பு கூட்டு (ஜி.வி.ஏ) 3.6 சதவீத வளர்ச்சியைக் காட்டியுள்ளது, இது ஊரக பகுதிகளில் சிறந்த நுகர்வுகளின் வாய்ப்பைக் குறிக்கிறது. 2020-21ம் பயிர் ஆண்டில் உணவு தானியத்தின் மொத்த உற்பத்தி 2.7 சதவீதம் அதிகரித்து 305.44 மில்லியன் டன் என்ற புதிய சாதனை படைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், டிராக்டரின் உள்நாட்டு விற்பனை 2020-21ம் ஆண்டில் 27 சதவீதம் அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று இந்தாண்டு இயல்பாக இருக்கும் என்ற முன்னறிவிப்பும், ஊரக வருவாயை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எளிதாக தொழில் செய்யும் விதிமுறை அமலாக்கம்: எளிதாக தொழில் செய்யும் சீர்திருத்தத்தை அமல்படுத்தியதற்காக, 2020-21ம் நிதியாண்டில், 20 மாநிலங்கள் ரூ.39,521 கோடி கூடுதலாக கடன் பெற அனுமதி வழங்கப்பட்டது.தமிழகம் உள்ளிட்ட 20 மாநிலங்கள் எளிதாக தொழில் செய்யும் சீர்திருத்தத்தை அமல்படுத்தியுள்ளன.

அந்தமான் & நிக்கோபார் பிரிவால் கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டது

1999 ல் நடைபெற்ற கார்கில் போரில் இந்தியாவின் வெற்றியை  குறிக்கும் விதமாக பிர்ச்குன்ஜ் ராணுவ மையத்தில் 2021 ஜூலை 26  அன்று கார்கில் வெற்றி தினம் அந்தமான் & நிக்கோபார் பிரிவால் கொண்டாடப்பட்டது.அந்தமான் & நிக்கோபார் பிரிவின் அனைத்து கூறுகளை சேர்ந்த கூட்டுப்பணியினர், கார்கில் போரில் தங்களது இன்னுயிரை தியாகம் செய்து பாதுகாப்பு படைகளின் பாரம்பரியத்தை காத்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அந்தமான் & நிக்கோபார் பிரிவின் தளபதி, லெப்டினெண்ட் ஜெனரல் அஜய் சிங் மலரஞ்சலி செலுத்தினார். அந்தமான் & நிக்கோபார் தீவுகளை சேர்ந்த முன்னாள் படை வீரர்களும் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தனர். படையினரிடையே உரையாடிய அந்தமான் & நிக்கோபார் பிரிவின் தளபதி, அனைத்து நேரங்களிலும் தயாராக இருந்து இணைந்து செயலாற்றுமாறும், இதன் மூலம் களத்தில் நன்மைகள் விளையும் என்றும் கூறினார். கொவிட்-19 விதிமுறைகளை பின்பற்றி நிகழ்ச்சி நடைபெற்றது.

கார்கில் 22 ஆம் ஆண்டு வெற்றி தினம் – பாராமுல்லாவில் உள்ள டேகர் போர் நினைவிடத்தில் குடியரசுத்...

கார்கில் 22ம் ஆண்டு வெற்றி தினத்தில், பாரமுல்லாவில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர்  ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  அவருடன், ஜம்மு மற்றும் காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் ஷின்ஹா, சினார் படைப்பிரிவு தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் டி.பி.பாண்டே ஆகியோர் உடன் சென்றனர். 1999ம் ஆண்டு கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த பாதுகாப்புப்படை வீரர்களுக்கு, பாரமுல்லாவில் உள்ள டேகர் போர் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர்  மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.  பாரமுல்லா ராணுவப் பிரிவு தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ், குடியரசுத் தலைவரை வரவேற்று, பாரமுல்லாவின் வரலாறு மற்றும் சுதந்திரத்துக்குப்பின் இங்கு மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கைகளை விளக்கினார். அதன்பின் மேதகு குடியரசுத் தலைவர், பாரமுல்லா பிரிவு ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடி அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். பாரமுல்லா பயணத்துக்குப்பின், குல்மார்க் சென்ற குடியரசுத் தலைவர், அங்குள்ள போர் பயிற்சி பள்ளியை பார்வையிட்டார்.  அங்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து குடியரசுத் தலைவருக்கு விவரிக்கப்பட்டது.  

உத்தராகண்டிலிருந்து துபாய்க்கு முதல் முறையாக காய்கறிகள் ஏற்றுமதி

உத்தராகண்டிலிருந்து துபாய்க்கு முதல் முறையாக நேற்று காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.  ஹரித்துவார் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட வெண்டைக்காய், பாகற்காய், பேரிக்காய், கருவேப்பிலை ஆகியவை துபாய்க்கு இன்று ஏற்றுமதி செய்யப்பட்டது. உத்தராகண்ட்டில் உற்பத்தி செய்யப்பட்ட தினை வகைகள் கடந்த மே மாதம் டென்மார்க்குக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இங்கிருந்து வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யும் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் விவசாயப் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம்(அபெடா) தொடர்ந்து கவனம் செலுத்துகிறது. 2020-21ம் ஆண்டில், இந்தியா ரூ.11,019 கோடிக்கு பழங்கள் மற்றும்  காய்கறிகளை ஏற்றுமதி செய்தது. அதற்கு முந்தைய ஆண்டில்  இது ரூ.10,114 கோடியாக இருந்தது. தற்போது காய்கறி பழங்கள் ஏற்றுமதி 9 சதவீதம் அதிகரித்துள்ளது.

தமிழகம் உள்ளிட்ட கடலோர மாநிலங்களில் ரோபாக்ஸ் மற்றும் நீர் டாக்சி சேவைகள் – மத்திய இணையமைச்சர் சாந்தனு தாக்கூர்

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப் பூர்வமாக பதிலளித்த துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள்  இணை அமைச்சர்  சாந்தனு தாக்கூர் கீழ்காணும் தகவல்களை  அளித்தார். நீர்வழி போக்குவரத்து என்பது செலவு குறைவானதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்கும் நிலையில், ரோபாக்ஸ் திட்டங்களை  பல்வேறு வழித்தடங்களில் சாகர் மாலா திட்டத்தின் கீழ் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் 7 திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டு, 14 திட்டங்கள் செயல்படுத்துதலின் கீழும் 50 திட்டங்கள் உருவாக்கத்திலும் (மொத்தம் 70) உள்ள நிலையில் தமிழ்நாட்டில் 3 திட்டங்கள் உருவாக்கத்தில் உள்ளன. இந்திய துறைமுகங்கள் வரைவு மசோதா 2020-ஐ பொது மக்கள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களின் ஆலோசனைக்காக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் வெளியிட்டது. பெறப்பட்டுள்ள ஆலோசனைகளை அமைச்சகம் கவனமாக பரிசீலித்து வருகிறது. இந்திய துறைமுகங்கள் சட்டம் 2021 ல்  அவை முறையாக சேர்க்கப்படும். சில மாநில அரசுகளிடம் இருந்து  ஆலோசனைகள் இன்னும் வரவில்லை. திறன் இடைவெளி ஆய்வு 21 கடலோர மாவட்டங்களில் மேற் கொள்ளப்பட்டது. துறைமுகம் மற்றும் கடல்சார் துறைக்கு சிறப்பு  கவனம் வழங்கப்பட்டது. ஆந்திரப் பிரதேசத்தில் விசாகப்பட்டினம் மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. கட்டுமானம், சரக்கு போக்குவரத்து, சுற்றுலா மற்றும் உற்பத்தி ஆகிய  துறைகளில் திறன்மிக்க பணியாளர்களுக்கான தேவை இருப்பது  ஆய்வில் கண்டறியப்பட்டது. பல்திறன் மேம்பாட்டு மையத்தை விசாகப்பட்டினம் துறைமுக பொறுப்பு கழகத்தில் நிறுவ முடிவெடுக்கப்பட்டது. செயல்படுத்துதல் மற்றும் மேலாண்மை பங்குதாரரும் தேர்ந்தெடுக்கப்பட்டு, விசாகப்பட்டினம் துறைமுக பொறுப்பு கழகத்தில் உள்ள கட்டிடம் பங்குதாரரிடம் வழங்கப்பட்டு விட்டது.
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS