குறு, சிறு, நடுத்தர தொழில் துறைக்கான நிதியுதவிகள் : மாநிலங்களவையில்அமைச்சர் நாராயண் ரானே தகவல் !
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்க மத்திய அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளதாக இத்துறையின் மத்திய அமைச்சர் நாராயண் ரானே கூறியுள்ளார்.
அவர் மாநிலங்களவையில் எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
* குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (MSMEs) ரூ.20,000 கோடி மதிப்பில் துணை கடன்.
* எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள் உட்பட தொழில்களுக்கு அவசரகால கடன் உதவி திட்டத்தின் கீழ் ரூ.4.5 லட்சம் கோடி உத்திரவாதம் இன்றி தானியங்கி கடன்கள்.
* எம்.எஸ்.எம்.இ. நிதி மூலம் Rs.50,000 கோடி பங்குத் தொகை உட்
செலுத்துதல்.
* இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கிக்கு (SIDBI) ரூ.15,000 கோடி
சிறப்பு மறு நிதியளிப்பு வசதி.
* சிறு நிதி நிறுவனங்கள் மூலம், 25 லட்சம் பேருக்கு கடன் உத்திரவாதத்துடன் கூடிய வசதி.
* இந்த நிதி நிறுவனங்களுக்கு ரூ.30,000 கோடி சிறப்பு பணப் புழக்க திட்டம்.
* வங்கி சாரா நிதி நிறுவனங்கள், குறு நிதி நிறுவனங்களுக்கு
ரூ.90,000 கோடி கடன் உத்திரவாத திட்டம்.
கொரோனா பாதிப்பு காரணமாக, வரி செலுத்துவோர் சந்தித்த சவால்களை கருத்தில் கொண்டு,
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உட்பட பல தொழில் நிறுவனங்களுக்கு வரி தொடர்பான பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.
* வரிச்சட்டங்களின் கீழ் பல இணக்கங்களுக்கு கால வரப்பு நீட்டிக்கப்
பட்டது.
* விவாத் சே விஸ்வாஷ் சட்டத்தின் நேரடி வரியின் கீழ் வரித்தாக்கலுக்கான தேதி நீட்டிப்பு.
* பெருநிறுவன வரிகள் திருப்பி செலுத்தப்பட்டன.
* வருமானவரி சட்டத்தின் கீழ் வரிப்பிடித்தம் கூறும் தகுதியான
தொடக்க நிறுவனங்களுக்கு இணைப்பு தேதி நீட்டிக்கப்பட்டது.
* வருமானவரி சட்டத்தின் 6ஏ பி பிரிவின் கீழ் பலவிதமான
முதலீடுகளுக்கு வரிப்பிடித்தம் கோருவதற்கான
கடைசி தேதியும் நீட்டிக்கப்பட்டது.
* தாமதமாக செலுத்தப்படும் வரிகளுக்கு ஆண்டுக்கு 18 சதவீதம் என்ற வட்டிக்கு பதிலாக வட்டி தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
காதி இயற்கை வண்ணப்பூச்சு தொடக்கம்:
காதி பிரகிரதிக் வண்ணப்பூச்சு, பசுஞ்சாணத்திலிருந்து, ஜெய்ப்பூரில் உள்ள குமரப்பா தேசிய கைவினை காகித மையத்தால் (KNHPI) உருவாக்கப்பட்டுள்ளது. இது ஜெய்ப்பூரில் உள்ள காதி மற்றும் கிராம தொழில்
ஆணையத்தின் ஆலை. காதி பிரகிரதிக் வண்ணப்பூச்சு சுற்றுச்
சூழலுக்கு உகந்தது மற்றும் மலிவானது என குமாரப்ப காகித மையம்
நடத்திய ஆய்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காதி வண்ணப்பூச்சு, காசியாபாத்தில் உள்ள தேசிய பரிசோதனை
மையம், மும்பையில் மத்திய அரசின் தேசிய பரிசோதனை மையம்,
தில்லியில் உள்ள ஸ்ரீராம் தொழில் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றில்
பரிசோதிக்கப்பட்டது. வண்ணப்பூச்சுக்கு தேவையான அளவுருக்களை இது நிறைவு செய்துள்ளது.
காதி வண்ணப்பூச்சுக்கு பசுஞ்சாணம் பயன்படுத்தப்படுவது, உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கும், கிராமங்களில் நிலையான வேலைவாய்ப்பை
உருவாக்கும், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தை பெற்று தரும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றம்: நிதின்கட்கரி தகவல்
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தேசிய நெடுஞ்சாலைகளில், மதுக்கடைகளை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக மாநிலங்களவையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்தார்.
அவர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
உச்சநீதிமன்றம் கடந்த 2016 மற்றும் 2017ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவுகளில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டி 500 மீட்டர் தூரத்தில் உள்ள மதுக்கடைகள், உள்ளாட்சி அமைப்புகளில் 20,000 மக்கள் தொகை உள்ள பகுதியாக இருந்தால் 220 மீட்டருக்குள் உள்ள மதுக்கடைகளுக்கு உரிமம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என கூறியிருந்தது.
அதன்படி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டது. மேலும், மோட்டார் வாகன சட்டத்தின் 185வது பிரிவின் கீழ் குடிபோதையில் வாகனம் ஓட்டினால், சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படுகிறது. அதோடு, அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் மூலம் குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ஏற்படும் அபாயம் குறித்த விழிப்புணர்வையும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மேற்கொள்கிறது.
மதுக்கடைகள் மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், மதுக்கடைகள் அகற்றப்பட்ட தரவுகளை மத்திய அரசு சேகரிக்கவில்லை.
நவீன பேருந்து நிலையங்கள்:
12வது ஐந்தாண்டு திட்டத்தில் அமல்படுத்த, நவீன பேருந்து நிலையங்கள் உருவாக்கும் திட்டத்தை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது. நவீன பேருந்து நிலையங்கள் அமைக்க, இத்திட்டம் நிதியுதவி அளிக்கும். இதற்கான மாற்றியமைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் 2018 செப்டம்பரில் வழங்கப்பட்டுள்ளன.
புடாபெஸ்ட்டில் இளையோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்ற இந்தியக் குழுவுக்கு பிரதமர் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி, ஹங்கேரி புடாபெஸ்ட்டில் நடைபெற்ற இளையோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்ற இந்திய அணியினருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “நமது விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து நம்மை பெருமை கொள்ளச் செய்கிறார்கள். ஹங்கேரி புடாபெஸ்ட்டில் நடைபெற்ற இளையோருக்கான உலக சாம்பியன்ஷிப்...
ரஷ்ய கடற்படை தின கொண்டாட்டங்களில் ஐஎன்எஸ் தபார் பங்கேற்றது
ரஷ்ய கடற்படையின் 325வது கடற்படை நாள் கொண்டாட்டங்களில பங்கேற்பதற்காக இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் தபார் ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்கை 2021 ஜூலை 22 அன்று சென்றடைந்தது.
ரஷ்ய கூட்டமைப்பிற்கான இந்திய தூதர் டி பி வெங்கடேஷ் வர்மா
கப்பலை பார்வையிட்டார். கப்பலின் தலைமை அதிகாரி அவருக்கு தற்போதைய பயணம் குறித்து எடுத்துரைத்தார்.
நமது கடல் பகுதிகளை காப்பதிலும், இந்தியரஷ்ய உறவுகளை வலுப்படுத்துவதிலும் இந்திய கடற்படை ஆற்றி வரும் பங்கை தூதர் பாராட்டினார்.
ரஷ்ய கடற்படையின் பால்டிக் பிரிவின் துணை தளபதி, துணை அட்மிரல் செர்ஜெய் யெலிசெயேவ் 2021 ஜூலை 23 அன்று தபாரை பார்வையிட்டார். அணிவகுப்பு மரியாதையுடன் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு நாட்டு கடற்படைகளுக்கிடையேயான வலுவான நட்பு குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் உள்ள வரலாறு சிறப்புமிக்க நினைவுக் கல்லறையில் கப்பலின் தலைமை அதிகாரி கேப்டன் மகேஷ் மங்கிபுடி அஞ்சலி செலுத்தினார்.
ஜூலை 25 அன்று, ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புதின் ஆய்வு செய்த ரஷ்ய கடற்படையின் 325-வது ஆண்டு விழாவில் தபார் பங்கேற்றது. 2021 ஜூலை 28 மற்றும் 29 அன்று கூட்டுப் பயிற்சியில் கப்பல் பங்கேற்கும்.
வெற்றிகளும் இழப்புகளும் வாழ்வின் ஒரு பகுதி – பிரதமர் மோடி
வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவியின் உணர்ச்சிப் பூர்வமான ட்வீட்டுக்கு பிரதமர் மோடி வெற்றிகளும், இழப்புக்களும் வாழ்க்கையின் ஒரு பகுதி, நீங்கள் உங்கள் முயற்சியை கொடுத்தீர்கள் அது முக்கியமானது என தெரிவத்துள்ளார். அது குறித்து பிரதமர் ட்வீட் பதிவில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக்கில் வாள் வீச்சு போட்டியின் முதல் சுற்றில் வென்று,...
மைகவ் ஏழு வருடங்களை நிறைவு – தன்னார்வலர்கள் மற்றும் பங்காற்பாளர்களுக்கு பிரதமர் பாராட்டு
மைகவ் தளத்தை தங்களது பங்களிப்பு மூலம் மெருகேற்றிய அனைத்து தன்னார்வலர்கள் மற்றும் பங்காற்பாளர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.
மைகவ் இந்தியாவின் டிவிட்டர் பதிவு ஒன்றுக்கு பதிலளித்த பிரதமர், “அனைவரும் பங்கு பெறும் ஆட்சி முறைக்கும், நமது இளைஞர் சக்திக்கு குரல் கொடுப்பதற்குமான சிறப்பான உதாரணமாக மைகவ் உயர்ந்து நிற்கிறது.
#7YearsOfMyGov (மைகவ்-வின் ஏழு வருடங்களை) நாம் இன்று குறிக்கும் போது, மைகவ் தளத்தை தங்களது பங்களிப்பு மூலம் மெருகேற்றிய அனைத்து தன்னார்வலர்கள் மற்றும் பங்காற்பாளர்களை நான் பாராட்டுகிறேன்,” என்று தெரிவித்தார்.
7 ஆண்டுகளை நிறைவு செய்தது ‘மைகவ்’ இணையதளம்
பிரதமர் நரேந்திரமோடியால் தொடங்கப்பட்ட ‘மைகவ்’ இணையதளம், 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
ஆன்லைன் தளம் மூலம் மக்களுக்கு நெருக்கமாக, அரசை கொண்டு செல்ல ‘மைகவ்’ (https://www.mygov.in/) என்ற இணையதளத்தை பிரதமர் நரேந்திர மோடி 2014ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி தொடங்கி வைத்தார். இதன் மூலம் நாட்டில் சமூக மற்றும் பொருளாதார மாற்றத்துக்கு தேவையான கருத்துக்களை ஆரோக்கியமான முறையில் மக்கள் பகிர்ந்துக் கொண்டனர். இந்த தளம் தனது 7 ஆண்டு பயணத்தை நிறைவு செய்துள்ளது.
மக்கள் பங்களிப்பு நிர்வாகத்தை வளர்த்ததில், மைகவ் இணைய தளத்தின் பங்களிப்பை நினைவு கூறும் நிகழ்ச்சி, ‘நேர்மறையான எனது அரசு (MyGov Positive ) என்ற கருப்பொருளில் நடத்தப்பட்டது. சமூக இணையதளத்தை நேர்மறையாக பயன் படுத்துவதை ஊக்கு விப்பதற்காக இந்நிகழ்ச்சி நடத்தப் பட்டது.
கொரோனா பற்றி தவறான தகவல்கள் நாட்டில் பரவும் நிலையில், மைகவ் இணையதளத்தின் கொரோனா உதவி மையம் - வாட்ஸ் அப் கலந்துரையாடல் மூலம் பொய் செய்தி களுக்கும் பதில் அளிக்கும் வகையில் நம்பகமான செய்திகளை வழங்கியது.
மக்களை ஈடுபாடு கருத்தை முன்னெடுத்துச் சென்று, சிறந்த நிர்வாக இலக்கை அடைய, மைகவ் உத்தரப்பிரதேசம் இணையதளத்தை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் ஆகியோர் இணைந்து இன்று தொடங்கி வைத்தனர்.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், இத் துறை செயலாளர் அஜய் பிரகாஷ் ஷானே, மைகவ் இணையதள தலைமை நிர்வாக அதிகாரி அபிஷேக் சிங் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
மைகவ் குழுவின் பங்கை பாராட்டிய மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘‘மக்களுக்கு டிஜிட்டல் அதிகாரம் அளிப்பதன் மூலம், அனைத்தும் உள்ளடங்கிய நல்ல நிர்வாகத்தை ஏற்படுத்தும் பிரதமரின் கனவை நனவாக்க மைகவ் இணையதளம் பணியாற்றியுள்ளது’’ என்றார்.
ஆட்சி நிர்வாகம் மற்றும் வளர்ச்சியில் மக்களின் தீவிர பங்களிப்பை ஊக்குவிப்பதில் மைகவ் இணையதளம் ஆற்றிய புதுமையான பங்கை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் பாராட்டினர்.
கொவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 44.19 கோடி கொவிட் தடுப்பூசி டோஸ்கள் போடப் பட்டுள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பின் வருமாறுதெரிவிக்கப் பட்டுள்து.
இதுவரை மொத்தம் 3,06,21,469 பேர் குணமடைந்துள்ளனர்.
குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.39 சதவீதமாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் 42,363 பேர் குணமடைந்துள்ளனர்.
132 நாட்களுக்குப் பிறகு அன்றாட பாதிப்புகளின் எண்ணிக்கை 30,000க்கும் குறைவாக இந்தியாவில் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 29,689 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 124 நாட்களுக்குப் பிறகு 4,00,000ஆகக் குறைந்துள்ளது; தற்போது இது 3,98,100ஆக உள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விழுக்காடு 1.27 சதவீதமாகும்.
வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 5 சதவீதத்திற்கும் குறைவாக சரிந்து, 2.33 சதவீதமாக உள்ளது.
தினசரி தொற்று உறுதி வீதம் தொடர்ந்து 3 சதவீதத்திற்கும் குறைவாக 1.73 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 45.91 கோடியாக அதிகரித்துள்ளது.
45.73 கோடிக்கும் அதிமான கொவிட் தடுப்பூசி டோஸ்களை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசு இதுவரை, 45.73 கோடிக்கும் அதிகமான (45,73,30,110) கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது. மேலும் கூடுதலாக 24,11,000 தடுப்பூசிகள் வழங்கப்படவிருக்கின்றன.
இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 43,80,46,844 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளன.
சுமார் 2.28 கோடி (2,28,27,959) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன.
சி.ஆர்.பி.எஃப். அமைப்பு நாள் – சி.ஆர்.பி.எஃப். வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து
மத்திய ரிசர்வ் காவல் படை (சி.ஆர்.பி.எஃப்) அமைக்கப்பட்ட நாளான இன்று சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் “துணிவு மிக்க சிஆர்பிஎஃப் வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் நல்வாழ்த்துகள். மத்திய ரிசர்வ் காவல் படை, வீரத்திற்கும், தொழில் திறனுக்கும் பெயர் பெற்றது. இந்தியாவின் பாதுகாப்புப் பணியில் இந்தப்படை முக்கிய பங்காற்றுகிறது. தேச ஒற்றுமைக்காக ஆற்றும் பணியும் பாராட்டத்தக்கது” என்று கூறியுள்ளார்.














