மகாத்மா காந்தி தேசிய கல்வி மற்றும் திறன் பயிற்சி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை மத்திய கல்வி மற்றும் திறன்...
மகாத்மா காந்தி தேசிய கல்வி மற்றும் திறன் பயிற்சி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைதல் அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று தொடங்கி வைத்தார். துடிப்புமிக்க இளைஞர்களுக்கு கள அளவில் பயிற்சி அளிப்பதை இந்த இரண்டு வருட திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.
ஐஐஎம்...
பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார அடிப்படைக் கட்டமைப்பு இயக்கத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார்
பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார அடிப்படைக் கட்டமைப்பு இயக்கத்தைத் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். வாரணாசிக்கான ரூ. 5,200 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் அவர் தொடங்கிவைத்தார். உத்தரப் பிரதேச ஆளுநர், முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள் டாக்டர். மன்ஷூக் மண்டாவியா, டாக்டர். மஹேந்திர நாத் பாண்டே,...
ராணுவ கண்காட்சி 2022-க்கான தூதர்கள் வட்டமேசைக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை வகித்தார்
நட்பு நாடுகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழில்களை சென்றடைவதற்கான முக்கிய முயற்சியாக, 2021 அக்டோபர் 25 அன்று புது தில்லியில் நடைபெற்ற ராணுவ கண்காட்சி 2022-க்கான தூதர்களின் வட்ட மேசைக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார்.
2022 மார்ச் 10-13 வரை...
உத்திரபிரதேசம் கான்பூரில் ஜிகா வைரஸ் : உயர் நிலை மருத்துவர் நிபுணர் குழுவை மத்திய சுகாதாரத்துறை...
உத்தரப்பிரதேசம் கான்பூரைச் சேர்ந்த 57 வயது நபருக்கு கடந்த 22ம் தேதி ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து உத்தரப்பிரதேசத்திற்கு உயர்நிலை மருத்துவர் நிபுணர் குழுவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது.
இந்தக் குழுவில் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் மையம், டாக்டர் ராம் மனோகர்...
நாசிக்கில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.100 கோடி வருவாய் கண்டுப்பிடிக்கப்பட்டது.
நாசிக்கில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நபருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 21ம் தேதி சோதனை நடத்தினர். இதில் நில ஒப்பந்தங்கள் உட்பட பல போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. சொத்துக்கள் வாங்க மிகப் பெரிய அளவில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன....
பணியின்போது உயிர்நீத்த காவல்துறையினருக்கு காவலர் நினைவு தினத்தில் பிரதமர் அஞ்சலி
பணியின்போது உயிர்நீத்த காவல்துறையினர் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச்செய்தியில்;
“காவலர் நினைவு தினத்தில், சட்டம் ஒழுங்கை பராமரிப்பதிலும் அவசர காலங்களில் தேவைப்படுவோருக்கு உதவுவதிலும் நமது காவல் படைகளின் தலைசிறந்த பணிகளை ஒப்புக்கொள்ள விரும்புகிறேன். பணியின் போது உயிர்நீத்த காவல் துறையினர் அனைவருக்கும் எனது...
100 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
100 கோடி தடுப்பூசிகள் என்ற இலக்கை கடந்து சாதனை படைக்க பாடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச்செய்தியில் :
“இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது, இந்தியாவின் அறிவியல், தொழில் மற்றும் 130 கோடி இந்திய மக்களின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றியை...
அருணாச்சல பிரதேசம் : சீன எல்லையில் அதிநவீன ஆயுதங்களை குவித்தது இந்தியா
அருணாச்சல பிரதேசத்தில் சீன எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவம் அதிநவீன ஆயுதங்களை தயார் நிலையில் வைத்துள்ளது.
அருணாச்சல பிரதேசத்தின் எல்லையை ஒட்டிய பகுதிகளில் சீனா, ராணுவ போக்குவரத்துக்கான சாலைகள், முகாம்கள், ராணுவ தளங்கள் போன்றவற்றை அமைத்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அருணாச்சல பிரதேச மாநில எல்லையில்...
உத்தரகாண்ட் கனமழை : உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக உயர்வு
உத்தரகாண்டில் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. தற்போது மழை பெரும்பானான இடங்களில் குறைந்துள்ளது. கனமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, அந்த மாநிலத்தின்...
விமானப்படையின் பயிற்சி விமானம் விழுந்து விபத்து : விமானி காயம்
மத்திய பிரதேசத்தில் விமானப்படையின் பயிற்சி விமானம் இன்று காலை விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
மத்திய பிரதேச மாநிலம் பிந்த் பகுதியில் விமானப்படையின் பயிற்சி விமானம் இன்று காலை விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானிக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பாராசூட் மூலம் விமானி தப்பினார்.

















