மீண்டும் சிக்கலில் எனை நோக்கி பாயும் தோட்டா – இந்த மாத இறுதியில் ரிலீஸ்?
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ளது. 2016-ம் ஆண்டிலேயே இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் முழு படப்பிடிப்பும் முடிந்தது. சமீபத்தில் தணிக்கை குழு படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கியது.
இதைடுத்து படத்தை திரைக்கு...
தல 59 படத்தில் இணைந்த மூத்த நடிகர்
அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அபிராமி வெங்கடாசலம் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
தற்போது இந்த கூட்டணியில் நடிகர் டெல்லி கணேஷ் இணைகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே...
புல்வாமா தாக்குதல் சம்பவம்: சினிமாவாக எடுக்க கடும் போட்டி
ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இந்த சம்பவத்தை இந்தியில் உரி த சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்ற பெயரில் படமாக எடுக்கப்பட்டது. கடந்த ஜனவரி 11-ந்தேதி வெளியான இந்த படத்துக்கு நாடு முழுவதும் நல்ல...
‘எனக்கும் ஒருநாள் கதவு திறக்கும், அருகில் இருப்பதே நமது வேலை’-விக்னேஷ் சிவன்
2019-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ‘கிரீன் புக்’, ‘ரோமா’, ‘பிளாக் பாந்தர்’ ஆகிய திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுகளை அள்ளின. இந்த நிலையில் தமிழ் சினிமா இயக்குனரும், நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் தனது ஆஸ்கர் கனவை வெளியிட்டு இருக்கிறார்.
ஆஸ்கர் விருது அரங்கிற்குள்...
துருவ் ஜோடியாகும் ஜான்வி கபூர்
தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை விக்ரம் மகன் துருவ்வை நாயகனாக அறிமுகப்படுத்தி ‘வர்மா’ என்ற பெயரில் பாலா இயக்கினார்.
வர்மா படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாரான நிலையில், படம் கைவிடப்படுவதாக படக்குழு அறிவித்தது. துருவ்வை கதாநாயகனாக வைத்து மீண்டும் படப்பிடிப்பு நடத்தி படத்தை வருகிற...
புல்வாமா தாக்குதல் – உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு ரோபோ சங்கர் உதவி
காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 மத்திய படை வீரர்கள் பலியானார்கள். இதில் தமிழக வீரர்களான தூத்துக்குடியைச் சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூரைச் சேர்ந்த சிவசந்திரன் இந்த தாக்குதலில் உயிர்நீத்துள்ளனர்.
அவர்களது உடல் நேற்று சொந்த ஊர் கொண்டுவரப்பட்டு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது....
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெயம் ரவி
ஜெயம் ரவி நடித்த ‘அடங்க மறு’ படம் 2 மாதங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வசூல் பார்த்தது. தற்போது கோமாளி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
கோமாளி படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. அடுத்து மோகன்ராஜா இயக்கும் தனி ஒருவன் படத்தின்...
பெண்கள் மீது மரியாதை, பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பாலாஜி-பிரியா ஆனந்த்
பிரபு இயக்கி உள்ள ‘எல்.கே.ஜி’ படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ராம்குமார் கணேசன், மயில்சாமி ஆகியோர் நடித்துள்ளனர். சமீபகால அரசியல் நிகழ்வுகளை மையப்படுத்தி ஆர்.ஜே.பாலாஜி இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறார்.
இந்த படத்தின் போஸ்டர்கள், டிரைலர், பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வரும் பிப்ரவரி...
செப் 9 ல் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் நாட்ரீச்சபிள் க்ரைம் த்ரில்லர் தமிழ் திரைப்படம் …
சென்னை, செப். 03 -
பல க்ரைம் திரில்லர் படங்கள் தமிழில் இதுவரை வந்திருந்தாலும், இத்திரைப்படம் புதிய திரைக்கதை, கதைக்களம் மற்றும் பாத்திரப்படைப்பு ஆகியவற்றின் மூலம் தமிழ் சினிமா உலகில் பெரும் வரவேற்பைக் காணயிருக்கிறது ''நாட் ரீச்சபிள்'' என்ற தமிழ் திரைப்படம் இப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் எதிர்...
ஏ.ஆர் முருகதாஸ் படத்தில் ரஜினிக்கு ஜோடியாகும் இரு நாயகிகள்
பேட்ட படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படம் முழுவதும் மும்பையில் படமாக்கப்பட உள்ளது. இதற்காக ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனிடம் முன்கூட்டியே மொத்த கால்ஷீட்டையும் வாங்கிவிட்டார் முருகதாஸ். இதில் ரஜினி இரண்டு வேடங்களில் நடிப்பதாக சில செய்திகள் வெளியாகின.
இந்த செய்தியை படக்குழு...



















