நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஐரா’. இந்த படத்தில் நயன்தாரா முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவருடன் கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

லட்சுமி, மா ஆகிய குறும்படங்களையும், `எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ என்ற திரைப்படத்தையும் இயக்கிய சர்ஜுன்.கே.எம். இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. சமீபத்தில் சென்சாரில் யு/ஏ சான்றிதழ் பெற்ற நிலையில், தற்போது இப்படத்தை மார்ச் மாதம் 28ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here