பெருங்குடி, ஏப். 27 –
சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நண்பகல் கொளுத்தும் வெயிலில் வீசும் அனல் காற்றில் தொடர்ந்து கொழுந்து விட்டு எரிந்து பரவி வரும் தீயினை அணைக்க துரைப்பாக்கம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அனைத்தனர். இருப்பினும் தொடர்ந்து நிமிடங்களில் தீ மீண்டும் பற்றிக்கொண்டு குப்பை கிடங்கில் அதிகம் பரவி தீ கொழுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருக்கிறது.
மேலும் இத் தீயினை கட்டுப்படுத்த துரைப்பாக்கம், மேடவாக்கம், சிறுசேரி, திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுபடுத்த தொடர்ந்துப் போராடி வருகின்றனர். இத் தீவிபத்து அவர்களுக்கு கட்டுப்படாமல் சவலாகவே இருந்து வருகிறது. தீயை முழுமையாக அணைக்க 2 நாட்கள் ஆகும் என தெரிவிக்கின்றனர்.






















