காஞ்சிபுரம், பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..
இன்று உலக தையல் கலைஞர்கள் தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட தையல் கலைஞர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகரின் முக்கியசாலைகள் வழியாக கவனயீர்ப்பு பேரணி நடத்தினார்கள். அப்பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட தையல் கலைஞர்கள் பங்கேற்றனர்.
பிப்ரவரி 28 ஆம் தேதியான இன்று உலக தையல் கலைஞர்கள் தினமாகும் மேலும் அதனை முன்னிட்டு, நவீன தையல் கலைஞர்கள் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தையல் கலைஞர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகரின் பல்வேறு முக்கியச் சாலைகள் வழியாக கவனயீர்ப்பு பேரணி சென்றனர்.
மின்சாரம் மானியம் வழங்கிட வேண்டும். ஓய்வு பெற்ற தையல் கலைஞர்களுக்கு பல காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரூ.3000 ஓய்வூதியத்தை ரூ.5000 உயர்த்தி மீண்டும் வழங்கிட வேண்டும். மேலும் தொகுப்பு வீடு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அத்தையல் கலைஞர்கள் முன்வைத்து காஞ்சிபுரம் மாநகரின் முக்கிய சாலையான காந்தி ரோடு, பெரியார் தூண் அருகே இருந்து மாநில தலைவர் பாபு தலைமையில் 100க்கும் மேற்பட்ட தையல் கலைஞர்கள் பேரணியாக புறப்பட்டு ராஜாஜி மார்க்கெட், ரங்கசாமி குளம் வழியாக கீரை மண்டபம் வரை சென்று அப் பேரணி வந்தடைந்தது.
அதனைத் தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் நவீன தையல் கலைஞர்கள் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு விழா வெகுச்சிறப்பாக நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் மாநில பொதுச்செயலாளர் சந்திரகுமார், மாநில பொருளாளர் சீனிவாசன், மாநில ஊடக செயலாளர் தனசேகரன், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் ராஜா, பொருளாளர் சிவஜோதி என பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.