பொன்னேரி, மார்ச். 18 –

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் சமீபத்தில் நடந்து முடிந்த நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் வழக்கறிஞர் விஜயகுமார் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் மறைமுகத் தேர்தலில் நகராட்சியின் துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் .இன்று காலையில் அதற்கான விழா மன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் நகராட்சியின் தலைவர் டாக்டர்.பரிமளம் விஸ்வநாதன், அதிமுகவின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம். பி. பலராமன், பொன்னேரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்ராஜா, பொதுக்குழு உறுப்பினர் பொன்னுதுரை உள்ளிட்டோரின் முன்னிலையில் . வழக்கறிஞர் விஜயகுமாருக்கு நகராட்சியின் ஆணையர் தனலட்சுமி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

நிகழ்ச்சியில் வெற்றிவேல் ராமலிங்கம். பொன்னேரி நகர கழக செயலாளர் உபயதுல்லா துணைசெயலாளர் சலீம். செல்வகுமார் . மீஞ்சூர் வழக்கறிஞர் மாரி .கொண்டகரை அமிர்தலிங்கம். உள்ளிட்ட திரளான அதிமுக தொண்டர்களும் மற்றும் திரளான வழக்கறிஞர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here