திருவாரூரில், 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் டார்ச் லைட் அடித்து நூதன முறையில் ஆர்பாட்டதில் ஈடுபட்டனர்.
திருவாரூர், ஆக. 30 –
திருவாரூர் முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாவட்ட தலைவர் ராஜகோபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அவர்களின் பிரதான கோரிக்கையாக தொடக்க கல்வி மாணவர்களுக்கு இணைய வழி தேர்வை கைவிட வேண்டும். மாணவர்களின் கல்வித் தரத்தை பாதிக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும், தொடக்க பள்ளி வரை வழங்கும் காலை உணவு வழங்கும் திட்டத்தை நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டார்ச் லைட் அடித்து நூதன முறையில் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் காசி.ராஜா, மாநில செயலாளர் வீரமணி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.


















