திருவண்ணாமலை பிப்.16-

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக 2022ஆம் ஆண்டு தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு எனது வாக்கு எனது எதிர்காலம் ஒருவாக்கின் வலிமை என்ற கருப்பொருளை மையமாக கொண்டு தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டி தொடங்கியுள்ளது.           

   தேர்தல் ஆணையம் வாக்காளர் தேர்தல் நடைமுறையில் பங்கேற்க முறையாக அறிவூட்டல் என்ற திட்டத்தின் மூலமாக மக்களின் திறமை மற்றும் படைப்பாற்றலை இப்போட்டியில் பங்கேற்க செய்வதன் மூலம் மக்களாட்சியின் முக்கியத்துவத்தை பறைசாற்றுகிறது. இதில் அனைத்து வயதினரும் பங்கேற்கலாம். தேசிய அளவிலான போட்டியில் விநாடிவினா போட்டி வாசகம் எழுதும் போட்டி பாட்டுபோட்டி காணொலி காட்சி உருவாக்கும் போட்டி மற்றும் விளம்பர பட வடிவமைப்பு போட்டி என 5 பிரிவுகளில் நடைபெறவுள்ளது.

   ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 வெற்றியாளர்களுக்கு அற்புதமான ரொக்க பரிசு வழங்கப்படும். அதுமட்டுமின்றி சிறப்பு பிரிவின்கீழ் ரொக்க பரிசு வழங்கப்படவுள்ளது. இதில் பங்கேற்பவர்கள் போட்டியின் விரிவான வழிகாட்டுதல்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை வளைதலத்தில் பார்வையிடலாம். பங்கேற்பாளர்கள் போட்டிகள் தொடர்பான பதிவுகள் மற்றும் அதனுடைய விவரங்களை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விநாடிவினா போட்டியில் பங்கேற்பாளர்கள் போட்டிக்கான வளைதலத்தில் பதிவு செய்யலாம்.

  போட்டி தொடர்பான அனைத்து பதிவுகளும் பங்கேற்பாளர்களின் விவரங்களுடன் இணைந்து அடுத்த மாதம் மார்ச் 15ந் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த போட்டிகளில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here