கும்பகோணம், மே. 27 –

கும்பகோணம் காவலர் குடியிருப்பு பகுதியில் தலைமை காவலர் மாமியார் தூக்கிட்டு தற்கொலை இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுவாமிமலை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரியும் சுமா இவர் குடும்பத்துடன் கும்பகோணம் நால்ரோடு காவலர் குடியிருப்பு வளாகத்தில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இவரது மாமியார்  செல்வி (60), நேற்று இரவு உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் நேற்று காலை காவலர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒருமரத்தில்  தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

அவரது உடலை கைப்பற்றிய கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, உடலை உடற்கூறு ஆய்விற்காக, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here