கும்பகோணம், மார்ச். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
பா.ஜ.க வைச் சேர்ந்த நடிகை குஷ்பு தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகையை பிச்சை என்று கூறியதை கண்டித்து திமுக மகளிரணி சார்பில் கும்பகோணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், செங்குன்றத்தில் பா.ஜ.க செயற்குழு உறுப்பினரும், தேசிய பெண்கள் ஆணையத்தின் உறுப்பினருமான குஷ்பு கலந்துக் கொண்டு உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்.
தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், மேலும் அப்போதைப் பொருள்கள் அனைத்தும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு செல்லவுள்ளதாக டெல்லியில் உள்ள அதிகாரிகள் சொல்லியுள்ளனர்.எனத்நெரிவித்த அவர் மேலும் அதற்கு தமிழக முதலமைச்சர் என்ன பதில் கொடுக்கப் போகிறார் எனவும், மேலும் இன்றைக்கு தாய்மார்களுக்கு 1000 ஆயிரம் ரூபாய் கொடுத்தால், பிச்சை போட்டால் தி.மு.க.வுக்கு அவர்கள் வாக்களிப்பார்களா?” எனப் பேசினார்.
இந்நிலையில் அவரின் அப் பேச்சு சர்ச்சைக்குரியது.அதனைத் தொடர்ந்து, பல்வேறு மாதர் சங்க அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த அனைவரும் அவரது அப்பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் குஷ்புவின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த வகையில், கும்பகோணம் திமுக மகளிரணி சார்பில் பழைய மீன் மார்க்கெட் அருகில் மகளிரணி அமைப்பாளர் சுபா திருநாவுக்கரசு, தலைமையில் நடைபெற்றது.
அதில் மாநகர அமைப்பாளர் தமிழ்ச்செல்வி, மாவட்ட அமைப்பாளர்கள் சுமதி, சுடர் வலி, சத்யபிரியா, பத்மாவதி கிருஷ்ணராஜ், திவ்யா சுசீலா அமராவதி, கீதா, மாநகர துணை செயலாளர் செந்தாமரை, மாமன்ற உறுப்பினர்கள் சுமதி, திவ்யபாரதி, தீபா, துணை அமைப்பாளர்கள் சுமதி கண்ணதாசன், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து குஷ்பு போட்டோக்களை கிழித்து விட்டு, ‘தமிழ்நாடு அரசு பெண்களுக்கு வழங்கும் ஆயிரம் ரூபாயைக் கேவலப்படுத்திப் பேசிய குஷ்பு ஒழிக!’ என்று கோஷமிட்டு போராட்டம் நடத்தினார்கள்.




















