திருவாரூர், மே. 02 –  

நன்னிலம் ஜேசிஐ சார்பில் தொழிலாளர்கள் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு மாரத்தன் போட்டி நடைப்பெற்றது. அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றனர். இதில் ஆண்களுக்கான 15 கிலோ மீட்டர் தூரம் மற்றும் பெண்களுக்கான 10 கிலோமீட்டர் தூரம் மாராத்தான் போட்டி நன்னிலம் அரசு விளையாட்டு மைதானம் முன்பு துவங்கி நன்னிலம், மாப்பிள்ளைகுப்பம், பணங்குடி, ஆண்டிபந்தல், சன்னாநல்லூர் வழியாக நன்னிலம் வந்து நிறைவடைந்தது.

இதில் ஆண்களுக்கான மாராத்தான் போட்டியில் முதல் பரிசை வென்ற ஈரோடு பகுதியை சேர்ந்த தினேஷ்ஜான் என்பவருக்கு 20 ஆயிரத்து 22 ரூபாயும், இரண்டாவது  பரிசை வென்ற திருநெல்வேலி ஆனந்தராஜ் என்பவருக்கு 15 ஆயிரத்து 22 ரூபாயும், மூன்றாவது பரிசை வென்ற திருநெல்வேலி பாலசுப்பிரமணியன் என்பவருக்கு 10 ஆயிரத்து 72 ரூபாய் வழங்கப்பட்டது. மேலும் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கினர்

அதேப்போல் பெண்களுக்கான மாரத்தான் போட்டியில் முதல் பரிசை வென்ற மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த கீதாஞ்சலி என்பவருக்கு 7022 ரூபாயும், இரண்டாவது பரிசை வென்ற மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த ரஞ்சனி என்பவருக்கு 5022 ரூபாயும், மூன்றாவது பரிசை வென்ற பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த கிருத்திகா என்பவருக்கு 3022 ரூபாயும் சான்றுகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திமுக குடவாசல் ஒன்றிய செயலாளர் ஜோதி ராமன் தேசிய தலைவர் ஞானசேகரன் நன்னிலம் பேரூராட்சி தலைவர் ராஜசேகரன் பள்ளியின் முதல்வர் பரிமலா காந்தி நகர செயலாளர் பக்கிரிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here