கும்பகோணம், மே. 02 –

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார் பாளையம் சேர்ந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த  மாணவன் சதீஷ்குமார் இவர் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் பி.ஏ., சுற்றுலா படித்து வந்தார்.

இந்நிலையில் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்தில் படியில் நின்றவாறு சென்ற போது பேருந்து நிலையம் அருகே 60 அடி சாலையில் பஸ் திரும்பும் பொழுது சாலையின் நடுவே மின்கம்பத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகையில் மோதி நிலைதடுமாறி தவறி கீழே விழுந்து உயிரிழந்தார்.

கும்பகோணம் மேற்கு காவல் நிலை போலீசார் இவ்விபத்துக் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். இதனிடையே கல்லூரி மாணவர்கள் மருத்துவமனை வளாகம் முன்பு கவனக்குறைவாக பேருந்தை ஒட்டிய ஓட்டுனரை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காவல்துறையினர் கல்லூரி மணவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை  அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here