செய்தி சேகரிப்பு இசிஆர்.பா.கண்ணன்
ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்ய வந்த நபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 7 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னை, செப். 10 –
சென்னை வேளச்சேரி ராம்நகர், 8வது தெருவில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்துள்ளது.
கிடைத்த தகவலின் பேரில் ஆய்வாளர் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டதில் மூட்டையில் 7 கிலோ 300 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்துள்ளது.
அதனை போலீசார் பறிமுதல் செய்து வீட்டில் உள்ளவர்களிடம் விசாரித்ததில் உறவினர் தேனி கம்பத்தை சேர்ந்த பாண்டியன் என்பவர் கொண்டு வந்து வைத்தாகவும், திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் கஞ்சாவை இங்கேயே வைத்துவிட்டு சென்று விட்டதாக தெரிவித்துள்ளனர்.
போலீசாரின் மேற் கொண்ட விசாரணையில் தேனி கம்பத்தை சேர்ந்த பாண்டியன் (69), என்பவர் கடந்த வாரம் ரயில் மூலம் சென்னை வந்ததாகவும், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அவர் மீது ஏற்கனவே கஞ்சா வழக்கு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவரை கைது செய்த வேளச்சேரி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.