`மிஸ்டர்.லோக்கல்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படத்தில் நடித்து வருகிறார்.
அடுத்ததாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் அரசியல் கலந்த த்ரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். சிவகார்த்திகேயனின் 15-வது படமாக உருவாகும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவிருக்கிறார். இந்த நிலையில், இந்த படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவானா ஒப்பந்தமாகியிருக்கிறார். இவர் ஏற்கனவே நாச்சியார் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவானாவின் பிறந்தநாளான இன்று இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அர்ஜூன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.