திருவாரூர். ஜூன். 07 –
தமிழகத்தில் ஏற்படும் மின்சார தட்டுபாட்டிற்கு தமிழக அரசு மட்டுமல்ல மத்திய அரசும் பொறுபேற்க வேண்டும். கார்பரேட் நிறுவனங்களுக்கு 24 மணி நேரம் தடையில்லாமலும், சில இடங்களில் இலவசமாகவும் மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக முத்துப்பேட்டையில் விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் தெரிவித்தார்.
தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு நாட்களாக பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே தில்லைவிளாகம் கிராமத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் டிஜிட்டல் பேனர் கட்டிய போது எதிர்பாராத விதமாக மின் சாரம் உடலில் பாய்ந்து உயிரிழந்த கட்சியின் நிர்வாகி சின்னத்துரை குடும்பத்திற்கு ஆறுதல் கூறி ரூ 2 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் திருச்சியில் உள்ள ஈழத்தமிழர் மறுவாழ்வு முகாமில் ஈழத்தமிழர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்கள் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சிறப்பு முகாம்களை கலைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். மின்சார தட்டுபாட்டிற்கு தமிழக அரசு மட்டுமல்ல மத்திய அரசும் பொறுப்பேற்க வேண்டும். தொடர்ந்து கார்பரேட் நிறுவனங்களுக்கு 24 மணி நேரம் தடையில்லாமலும் சில இடங்களில் இலவசமாகவும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அத்தியவாசிய தேவைகளுக்கு மின்சாரம் தேவைபடுகின்றது. கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு சலுகை கட்டணத்தில் மின்சாரம் வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மின்தட்டுபாடு நிலக்கரி தட்டுபாட்டிற்கு மத்திய மாநில அரசுகள்தான் பொறுபேற்க வேண்டும்.
முத்துப்பேட்டை பகுதியில் மத்திய மாநில அரசுகள் திட்டத்தில் கட்டபட்டுள்ள பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகளின் ஆதாரங்களை திரட்டி முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்தார்.





















