செங்கல்பட்டு, மே.12 –
செங்கல்பட்டு மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் முதியவர்களுக்கான இயன்முறை சிகிச்சை பிரிவு (Eders Physiotherapy Unit) தொடங்க மாவட்ட ஆட்சியரின் உத்திரவின் பேரில் Chengalpattu District Mineral Foundaion Trust நிதி உதவியில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 மருத்துவமனைகளில் ரூ.9.51,000 மதிப்பில் இயன்முறை சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்து வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நேற்று, நந்திவரம் கூடுவாஞ்சேரியில் உள்ள தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையத்தில் முதியவர்களுக்கான இயன்முறை சிகிச்சை பிரிவை தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து முதியவர்களுக்கு உபகரணங்களை வழங்கினார். இந்நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.























