திருவாரூர், நவ. 30 –

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு திருவாரூரில் நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணியை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் விழிப்புணர்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இன்று உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு திருவாரூர் நகராட்சி  அலுவலக வாசலில் சமூகங்களுடன் சேர்ந்து எச்ஐவி எய்ட்ஸ் தொற்றினை குறைக்கும் செயலை முன்னெடுப்போம் என்பதை வலியுறுத்தும் விதமாக நடைபெற்ற கையெழுத்து இயக்க விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கையொப்பமிட்டு தொடங்கி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து  உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் உள்ளிட்வர்களும் மற்றும் அரசு அதிகாரிகள் என திரளானவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

மேலும் பொது மக்களிடையே எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்வில் பங்கேற்ற திரளான கல்லூரி மாணவிகளின்  விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மேலும் இவ்விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் தங்கள் கைகளில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியவாறு சுற்றி வந்து மீண்டும் நகராட்சி அலுவலகம் வந்தடைந்தனர். தொடர்ந்து தனியார் ஹோட்டலில் சம்பந்தி போஜனம் நடைபெற்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here