திருவாரூர். ஜூன். 07 –

தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் நியாய விலைக்கடை பணியாளர்கள் கடையை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டம் மூன்று நாள் நடைபெறுவதாக திட்டம் வகுக்கக்கப்பட்டு அதன் முதல் நாளான போராட்டம் இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நியாயவிலைக் கடை பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 31 சதவீத அகவிலைப்படி, புதிய விற்பனை முனையம், மோடம் வழங்குதல், சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்குதல் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

திமுக அரசு தேர்தல் அறிவிப்பில் தெரிவித்தது போல் தனித்துறை அமைத்திட வலியுறுத்தி பணியாளர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here