தஞ்சாவூர், மார்ச். 06 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு

டெல்டா மாவட்டங்களில் தொல்லியல் ஆதாரங்களைப் பெறுவதற்கு இன்னும் முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்தியத் தொல்லியல் துறையின் கண்காணிப்பு தொல்லியலாளர் (சென்னை) அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வரலாற்றுத் துறை, வரலாற்றுப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சிந்து முதல் பொருநை வரை என்கிற மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது

அக்கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த அமர்நாத் ராமகிருஷ்ணன்  செய்தியாளர்களுக்கு அப்போது அவர் பேட்டி அளித்தார்..

டெல்டா மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சி செய்யப்படுகிறது. ஆனால் இன்னும் முழுமையாக ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும். டெல்டா மாவட்டங்கள் தொடர்ந்து இயங்கி வரும் இடமாக அமைந்திருக்கிறது.

ஆனால் இங்கு தொல்லியல் எச்சங்களைக் கண்டறிவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. இந்த நோக்கத்துடன் செயல்பட்டால் பல இடங்களில் தொல்லியல் எச்சங்களைக் கண்டறியலாம்.

வல்லம், ஆம்பல்,  போன்ற இடங்களில் தோண்டப்பட்டுள்ளது. இன்னும் பல இடங்களைக் கண்டுபிடிக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். இதன் மூலம் சிறந்த ஆதாரங்களைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

நெற்களஞ்சியமாகத் திகழும் இப்பகுதியில் சிறந்த நாகரிகம் தோன்றியதற்கான ஆதாரங்களை இன்னும் முழுமையான ஆய்வுகள் மேற்கொள்வதன் மூலம்தான் கிடைக்கும். இதற்காக தமிழக அரசு சிறந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறது என்றார்.

கீழடி அகழாய்வு என்பது மிகப் பெரிய தொல்லியல் மேடு. இதை இன்னும் தோண்டுவதன் மூலம் முழுமையான வரலாறு கிடைக்கும். பாடத்திட்டங்களில் கற்றுக் கொள்வதன் மூலம்தான் மாணவர்களுக்கு தொல்லியல் மீதான ஆர்வம் ஏற்படும். தொல்லியல் மீது பற்றுதல் ஏற்படுவதற்கு மாணவர்களுக்குக் கற்றுத் தர வேண்டும் எனவும் அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்தார்.

அவரைத்தொடர்ந்து வரலாற்றுப் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் கருணாகரன் கூறும் போது

தமிழர்களின் தொன்மையான வரலாற்றைப் புத்தகங்களில் இருந்து அகற்றுவதற்கு பெரு முயற்சி நிகழ்ந்து வருவதால், இந்தக் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. தமிழர்களுக்குத் தொன்மை இல்லை என்றும், அனைத்தும் பின்னால் பிறரால் தரப்பட்டது எனவும் கூறப்படுகிறது. ஆனால் அக்கூற்று உண்மை அல்ல எனவும் மேலும் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் செய்திகள் உண்மையானவை. அதற்கும் முந்தைய தொன்மை தமிழர்களுக்கு தொடர்பு உண்டு என்ற உண்மையைச் சொல்வதற்கு தொல்லியல் ஆய்வுகள் பயன்படுகின்றன என்றார்.

மத்திய அரசால் கொண்டு வரப்படும் பாடத்திட்டங்களில் திராவிடத் தொன்மை மறைக்கப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாட்டு வரலாறு மட்டுமல்லாமல் இந்திய தேசியத்தின் ஒரு பகுதியாக உள்ள தமிழ்நாட்டின் தொன்மைக்கும் உரிய இடம் அளிக்க வேண்டும் என்றார் கருணானந்தன்.

இக்கருத்தரங்கத்துக்கு கல்லூரி முதல்வர் அ. ஜான் பீட்டர் தலைமை வகித்தார். வரலாற்றுப் பாதுகாப்பு இயக்க புரவலர் கு. ராமகிருட்டிணன் வாழ்த்துரை வழங்கினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here