தஞ்சாவூர், மார்ச். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் பெண் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணி செய்து கொண்டிருந்த இடங்களுக்கே நேரில் சென்று பரிசுப்பொருட்கள் இனிப்புகள் வழங்கி பாராட்டு தெரிவித்த ஜோதி அறக்கட்டளை தனியார் நிறுவனம்.
பொதுவாக சர்வதேச மகளிர் தினத்தன்று பெண்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும், மேலும் அவர்களின் சாதனைகளை ஊக்குவிக்கும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப் பட்டு அவர்களுக்கு சிறப்பு சேர்த்து வருகிறது.
அதனை முன்னிட்டு தஞ்சை மாநகராட்சியில் பணிபுரியும் பெண் தூய்மை பணியாளர்களின் சேவையை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு ஜோதி அறக்கட்டளை சார்பில் பரிசு வழங்கி பாராட்டி கௌரவிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
தஞ்சை நகர பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளும் பெண் தூய்மை பணியாளர்களின் பணி செய்து கொண்டிருந்த இடங்களுக்கு அதிகாலையிலேயே ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் நேரில் சென்று அவர்களை சந்தித்து மகளிர் தின வாழ்த்துக்களை கூறி இனிப்புகளை பரிமாறியதுடன் மேலும் ஒவ்வொரு பெண் தூய்மை பணியாளர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தம் புதிய பல வண்ண புடவைகளை பரிசாக வழங்கி அவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்கள்..
இது குறித்து ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவிக்கையில் சர்வதேச மகளிர் தினமான இன்று நகரத்தையும் நமது சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைக்கவும் நோய் தொற்றிலிருந்து நம்மை காக்க மறைமுகமாக பாடுபடும் பெண் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் தூய்மை பணியில் இருந்த அவர்களை அவர்கள் தூய்மை பணி செய்து கொண்டிருந்த இடங்களுக்கே நேரில் சென்று அவர்களுக்கு எங்கள் கைகளினால் இனிப்புகளை ஊட்டிவிட்டு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வண்ண புடவையும் பரிசளித்து வாழ்த்து கூறினோம் . மொத்தம் 100 பெண் தூய்மை பணியாளர்களுக்கு இவ்வாறு இனிப்புகளும் புடவைகளும் பரிசாக வழங்கப்பட்டதாக அப்போது தெரிவித்தார்கள்.
மேலும் எல்லோரையும் விட வணங்க வேண்டியவர்கள் தூய்மை பணியாளர்களே எனவும் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் இவர்களது பணி மற்றும் சேவையை அளவிட முடியாது என்பதால் வாய்ப்பு கிடைக்கும் போது கௌரவிக்கிறோம் என்றனர் .
தாங்கள் தூய்மை பணியில் இருந்த அசுத்தமான இடத்துக்கு அதிகாலையிலேயே ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் தேடி வந்து எங்களுக்கு இனிப்புகள் பரிமாறியும் புத்தம் புதிய புடவையை பரிசளித்தையும் பெற்ற அப் பெண் தூய்மை பணியாளர்கள் உளம் நெகிழ்ந்தனர் .
இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.






















