மீஞ்சூர், ஏப். 01 –

திருவள்ளூர் மாவட்டம், வடகாஞ்சி என அழைக்கப்படும் மீஞ்சூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழாவினை முன்னிட்டு இன்று மிகச்சிறப்பாக திருத்தேர்திருவிழா நடைபெற்றது,

மேலும் இப்பெருவிழா ஆண்டு தோறும் 14 நாட்கள் நடைப்பெறுவது வழக்கமாகும். அதுப்போன்று இவ்வாண்டும் இவ்விழா கடந்த மார்ச் 26 ஆம் தேதியன்று இத்திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு ஆராதனைகளுடன் ஏகாம்பரநாதர் தினந்தோறும் சிம்ம வாகனம், மயில்வாகன, கருடவாகனம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி அலங்கரிக்கப்பட்டு தினந்தோரும் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

அதன் தொடர்ச்சியாக  இத்திருவிழாவின் ஏழாம் நாளான இன்று ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. ரத சாந்தியுடன் மகா அபிஷேகம் நடைபெற்று, தாரை தம்பட்டங்களுடன் சங்குகள் முழங்க ,மகா தீபாரதனை காட்டப்பட்டு பொதுமக்களின் மத்தியில் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இன்று அதிகாலை 8 20 மணிக்கு இத்திருத்தேராட்டத்தை பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சிறுணியம் பி. பலராமன், பொன் ராஜா, காங்கிரஸ் மூத்த நிர்வாகி வி.ஆர் பகவான், பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொறுப்பாளர் ஆர்.எம். ஆர். ஜானகிராமன், மீஞ்சூர் முன்னாள் பேரூராட்சி  தலைவர் சுப்பிரமணி, மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ், மீஞ்சூர் பேரூர் கழக திமுக செயலாளர் தமிழ்உதயன், பேரூராட்சியின் துணைத் தலைவர் அலெக்சாண்டர், உள்ளிட்டவர்கள் வடம் பிடித்துயிழுக்க அவர்களுடன் ஆயிரக்கணக்கான அப்பகுதி மக்களும் வடம் பிடித்து இழுக்க இத்திருதேரோட்டம் இனிதே துவங்கியது.

மேலும் அதனைத்தொடர்ந்து இத்திருத்தேரோட்டம் மீஞ்சூர் நகர  முக்கிய வீதிகளின் வழியே வலம்  வந்து மதியம் 12:30 மணியளவில் இருப்பிடத்தைச் சேர்ந்தது.

மேலும் இத்திருத்தேரோட்டத்தின் போது வடம் பிடித்திழுத்து வந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் பக்திப் பெருக்குடன் சிவ சிவாய என மந்திரங்கள் முழங்க திருவிழா நடைபெற்றது. மேலும் இத்திருத்தேரோட்ட திருவிழாவனை முன்னிட்டு பாதுகாப்பிற்காக உள்ளூர் மற்றும் மாவட்ட அளவில் வந்திருந்த 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here