சென்னை, ஜூலை 31 –

சென்னை தரமணியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் கடந்த 29 ஆம் தேதி தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, அங்குள்ள முன்காண் திரையரங்கம், மறு ஒலிப்பதிவு திரையரங்கம், மற்றும் குளிரூட்டப்பட்ட படப்புத்தளம் மாணவர்களின் படப்பிடிப்பு தளம் மாணவர் தங்கும் விடுதி உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப் பயன் பிரிவு மற்றும் வளாகத்தில் அமைந்துள்ள ஏனைய உடகட்டமைப்பு வசதிகளை நேரில் ஆய்வு செய்தார்.

மேலும் மறு ஒலிப்பதிவு திரையரங்கத்தில் மாணவர்களால் தயாரிக்கப்பட்ட குறும்படத்தினை பார்வையிட்டப்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் பேசும் போது, கடந்த ஜூலை 27 அன்று முதலமைச்சர் தலைமையில் நடைப்பெற்ற தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் ஆய்வுக்கூட்டத்தில் செய்தித்துறையில் பல்வேறு ஆக்கப் போர்வமானப் பணிகளையும் தொலை நோக்குத் திட்டங்களையும் வகுக்க வேண்டும் எனவும் கள ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளுமாறும்அறிவுறுத்தினார்.

அதன் அடிப்படையில் செய்தித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி இந்நிறுவனத்தை மேலும் மேம்படுத்துவது தொடர்பாக முதலமைச்சரிடம் கலந்து ஆலோசித்து உலகத்தரத்திற்கு இணையாக மேம்படுத்த நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும் என்றார். மேலும் இந்த ஆய்வின் போது வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஜே.எம்.எச்.அசன் மௌலான தமிழ் வளர்ச்சி மற்றும் ஞெய்தித்துறை அரசு செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் ஆகியோர் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here