தக்கலை:

தக்கலையில் மேம்பாலம் அமையுமானால் வணிகர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் வாழ்வாதரம் முடங்கி விடும். இது சம்மந்தமாக ஏற்கனவே வணிகர் சங்கம் சார்பில் கடை அடைப்பு, உண்ணாவிரதம், காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளிடம் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் நேற்று மணலி சந்திப்பில் இருந்து தக்கலை பழைய பஸ் நிலையம் வரை மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

மேலும் இந்த போராட்டத்திற்கு அப்பகுதியில் பணிபுரியும் கடை ஊழியர்கள், பெண்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாலையில் பத்மநாபபுரம் நகர தொழில் வணிகர் சங்கம் சார்பில் அவசர கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு சங்க தலைவர் ரேவன்கில் தலைமை தாங்கினார். பொது செயலாளர் விஜய கோபால் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சண்முகம், மோசஸ் ஆனந்த் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் தக்கலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here