காஞ்சிபுரம், ஏப். 03 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …

காஞ்சிபுரம் மாவட்டம், அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார்.

மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது . பிரச்சாரத்திற்கு குறைந்த நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் , முக்கிய கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் களத்தில் இறங்கி  தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இன்று காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பார் இ. ராஜசேகரை  ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அதிமுக மற்றும் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குவிந்தனர். திறந்த வெளி வாகனத்தில் நின்றபடி பிரச்சாரம் மேற்கொண்ட பிரேமலதா கச்சத்தீவு பிரச்சனை மிகப் பெரிய அளவில் பேசப்படுகிறது . கலைஞர் மற்றும் இந்திரா காங்கிரஸ் இணைந்து நமது உரிமைகளை தாரை வார்த்து கொடுத்து விட்டார்கள். அன்றிலிருந்து ஆரம்பிப்பதுதான், மீனவர்களின் பிரச்சனை. திமுக காங்கிரஸ் கச்சத்தீவு மற்றும் காவேரி உரிமையும் விட்டுக் கொடுத்து விட்டார்கள்.

மேலும் இலங்கைத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு காரணம் திமுக காங்கிரஸ்தான்.‌ எல்லா பிரச்சனைக்கும் திமுக மற்றும் காங்கிரஸ்தான் . இந்த தேர்தலில் அதனால் நமதுக் கூட்டணி வேட்பாளர்களை மகத்தான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள்.

மேலும், எதிர் வரும் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நாள் அன்று காலையிலே சென்று எல்லோரும் வாக்களித்து விடுங்கள். இல்லை யென்றால் உங்கள் வாக்கு காள்ள ஓட்டாக மாறிவிடும். எனவும் மேலும் இன்று திமுக ஆட்சி பலம் அதிகார பலம் பணபலம் வைத்து சட்ட ஒழுங்கு சீர்கெட வைத்து எல்லா தொகுதியிலும் ஜெயிக்க அனைத்து வன்முறைகளையும் , கட்டவிழ்த்துவிட தயாராக இருக்கிறார்கள் என அப்போது அவர் தெரிவித்தார். மேலும் அக்கூட்டத்தில் தேமுதிக ,அதிமுக உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here