சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜனதா இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க.- பா.ம.க. இடையே கூட்டணி ஏற்பட்டிருப்பது பற்றி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். “டாக்டர் ராமதாஸ் அ.தி.மு.க.வை விமர்சித்து புத்தகமே போட்டுள்ளார்.
அதில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களின் ஊழல்கள் பற்றி எழுதி இருக்கிறார். ஆனால் இன்றைக்கு மக்களை பற்றி கவலைப்படாமல் பணத்துக்காக கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள்” என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-
அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜனதா இடையே கூட்டணி அமைந்ததில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல். அ.தி.மு.க.வில் மெகா கூட்டணி அமைந்து விட்டது என்ற ஆதங்கம் மு.க.ஸ்டாலின் பேச்சில் தெரிகிறது.
அ.தி.மு.க. கூட்டணி பற்றி மு.க.ஸ்டாலின் சொல்வது மக்களிடம் எடுபடாது. அ.தி.மு.க. கூட்டணி இயற்கையாக அமைந்தது. இது மக்கள் நலக் கூட்டணி ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.