தஞ்சாவூர், ஏப். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பேராவூரணி கூப்புளிக்காட்டில் பகுதி நேர அங்காடி அமைத்து தராததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக் கிராம மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பை பலகையை வைத்துள்ளனர். மேலும் எந்த ஒரு வேட்பாளரும் ஊருக்குள் ஓட்டு கேட்க அனுமதிக்க மாட்டோம் என்ற எச்சரிக்கை பலகையையும் வைத்துள்ளனர். அதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
பேராவூரணி பேரூராட்சி கூப்புளிக்காடு பகுதியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் ஆரம்ப கால கட்டத்திலிருந்தே சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் ஆதனூர் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் ரேஷன் பொருட்களை வாங்கி வருவதாகவும், மேலும் கூப்பிலிக்காடு பகுதியில் பகுதி நேர அங்காடி அமைத்துதர வேண்டும் என்ற கோரிக்கையை பல ஆண்டுகளாக தெரிவித்தும் அதற்காக பல்வேறு காலக்கட்டங்களில் தொடர் போராட்டங்களை நடத்தி அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றும் இந்நாள் வரை உள்ளூர் மற்றும் மாவட்ட மேலும் துறைச்சார்ந்த நிர்வாகம் என எந்த ஒரு அரசு துறையினரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகிவுள்ளதாகவும்.
இந்நிலையில் தங்களின் உணர்வுகளுக்கும் உரிமைக்கும் செவி சாய்க்காத அரசு நிர்வாகத்தின் மீது ஆத்திரமடைந்த அப்குதியையைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடிகளை கட்டியும், பெண்கள் ஒரே இடத்தில் ஒன்று திரண்டு கருப்பு கொடிகளுடன் அமர்ந்து அறவழியில் போராட்டம் நடத்தினர்.
அப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், எங்களுடைய நீண்ட நாள் கோரிக்கையான பகுதி நேர அங்காடியை கூப்புலிக்காடு பகுதியில் அமைத்து தர வேண்டும். மறுக்கும் பட்சத்தில் வர இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலை நாங்கள் புறக்கணிக்க உள்ளோம். அதே சமயத்தில் எந்த ஒரு வேட்பாளரும் ஊருக்குள் ஓட்டு கேட்டு வர அனுமதிக்க மாட்டோம் என்றனர்.
பேட்டிகள். 1. பிரியா,
- தினேஷ் – கூப்புளிக்காடு




















